- நிதானமாக படிக்கவும் -
முன்னரே நாம் பார்த்தபடி ,உள்நாட்டு பொருளாதாரம் , உலக பொருளாதாரம் , துறை வளர்ச்சி ஆகிய வடிகட்டிகளை பயன்படுத்தி ஒரு பட்டியல் தயாரித்து ,அப்பட்டியல் உள்ள நிறுவனங்களை நாம் FA -க்கு உட்படுத்த வேண்டும் ,
ஒரு நிறுவனத்தை FA -க்கு தேர்வு செய்வதை விட அதை fa உட்படுத்துவதே சற்று கடினமாக இருக்கும் , ஆதலால் சரியாய் வடிகட்டிவிடுங்கள் , நீங்கள் திருப்தி அடைந்தவுடன் FA மேற்கொள்வது சாலசிறந்தது .
நம் அறிவியல் தொழில் நுட்பம் , மென்பொருட்களை வாரி வழங்கி உள்ளது ,இந்த மென்பொருட்களை பயன்டுதுவதன் மூலம் FA எளிதாக்கி கொள்ளலாம் .
பொருளாதாரம் மனிதில் கொண்டு , துறை ஒப்பிடல் மேற்கொண்டு பின் , நிறுவன ஒப்பிடலை மேற்கொள்ளவும் .
நிறுவனத்தின் வளர்ச்சியை காண முக்கியமான காரணி, துறை வளர்ச்சியில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு - இந்த காரணியை சரியான விதத்தில் பார்த்தாலே கால்வாசி FA முடித்த மாதிரி .
இதுல சில சமயம் , சில நிறுவனங்கள் துறைவளர்சிக்கு குறைவான பங்களிப்புடன் இருக்கும் ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால், கடந்த ஆண்டு பங்களிப்பை விட இந்த ஆண்டு பங்களிப்பு கணிசமாக உயர்ந்து இருக்கும் . அதாவது தனிப்பட்ட நிறுவன வளர்ச்சி நன்றாக உள்ளது என்பதே மறைந்து கிடக்கும் பொருள் .
விற்பனை விகிதம் :-
விற்பனை என்பது நிறுவனத்தை ஆராய்யும் பொழுது எடுத்துகொள்ளப்படும் மிக மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும் . இதுவே அந்நிறுவனத்தின் லாபம் மற்றும் வளர்ச்சியை எடுத்துக்கட்டும் அளவுகோல் அகும் .
ஓர் நிறுவனத்தின் விற்பனையே அந்நிறுவனத்தை ,அதன் போட்டியளர்களிடமிருந்து
வேறுபடுத்தி , அந்நிறுவனத்தை சந்தையில் உயர்த்தியும் ,தாழ்த்தியும் காட்டுவது .
மேலும் பொது சந்தையில் நிறுவனம் கொண்டுள்ள பங்கையும் (market share ) இந்த விற்பனையே நிர்னையப்பதுடன் , பொது சந்தையில் நிறுவனம் தனக்கென கொண்டுள்ள இடத்தை தக்க வைக்குமா ? அல்லது மாறும் வாய்ப்புள்ளதா? என்பதை கண்டறிய உதவும் காரணியாகும் .
விற்பனை காரணியை பொறுத்தவரையில் , ஓர் நிறுவனத்தின் விற்பனையை அதன் கடந்தகால விற்பனையுடன் ஒப்பிடுதல் , போட்டியாளர்களுடன் ஒப்பிடுதல் , விற்பனை வளர்ச்சி விகிதத்தை கணக்கிடுதல் , நிறுவனத்தின் விற்பனை நிலைப்பு தன்மை கணக்கிடுதல் ,போன்றவற்றை ஆராய்வதன் மூலம் விற்பனை காரணியை பற்றி ஒரு புரிதலுக்கு வார முடியும் .
போட்டியாளர்களிடம் ஒப்பிடும் பொழுது , நிறுவனங்களின் மூலதனத்தை கருத்தில் கொள்ளுங்கள் , குறைவான முலதனம் கொண்டு ,அதிக விற்பனை செய்யும் நிறுவனங்களும் உண்டு , அதிக முலதனம் கொண்டு குறைவான விற்பனை செய்யும் நிறுவனங்களும் உண்டு ,
மேலும் அதிக விலை வைத்து குறைவான விற்பனை - ஆனால் அதிக லாபம் , குறைவான விலை வைத்து - அதிக விற்பனை - அதிக லாபம் என பல்வேறு திட்டங்கள் (தில்லலங்கடி வேலை ) உண்டு ,இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும் ,
ஆகவே விற்பனையை எண்ணிக்கையில் பார்பதோடு நின்றுவிடாமல் , இதனை விகிதத்திலும் , லாபத்தோடு தொடர்பு வைத்து பார்ப்பதும் மிக மிக அவசியமே .அப்படியே எதிகாலத்தை தீர்மானிக்க order book -கையும் ஒரு கை பார்த்துவிடுங்கள் .
Annual Trends | ||||
Sun TV Network | Zee Entert | Dish TV India | DEN NETWORK | |
Results (in Cr.) | 10-Mar | 10-Mar | 10-Mar | 10-Mar |
Sales | 1,395.01 | 1,276.27 | 1,084.79 | 328.26 |
PAT | 567.38 | 429.16 | -261.33 | 20.82 |
Equity | 197.04 | 43.4 | 106.21 | 130.49 |
Ratios | ||||
OPM % | 82.66 | 49.79 | 8.44 | 18.66 |
NPM % | 40.67 | 33.63 | -24.09 | 6.34 |
EPS | 14.4 | 9.61 | -3.18 | 1.79 |
CEPS | 21.64 | 10.15 | 0.41 | 3.27 |
PE | -- | -- | -- | -- |
Ownership | 10-Jun | 10-Jun | 10-Jun | 10-Jun |
Promoter & Promoter Grp | 30,34,45,157 | 20,74,35,265 | 68,92,22,979 | 7,01,16,720 |
Indian | 30,34,45,157 | 12,13,01,863 | 65,30,90,854 | 7,01,16,720 |
Foreign | -- | 8,61,33,402 | 3,61,32,125 | -- |
Public | 9,06,39,463 | 27,70,48,468 | 25,71,61,496 | 6,03,73,255 |
Institution | 4,99,87,534 | 24,05,09,100 | 13,26,15,903 | 1,60,40,646 |
FII | 3,30,65,818 | 13,33,88,597 | 6,02,77,267 | 1,23,04,624 |
DII | 1,69,21,716 | 10,71,20,503 | 7,23,38,636 | 37,36,022 |
Non Institution | 4,06,51,929 | 3,65,39,368 | 12,45,45,593 | 4,43,32,609 |
Bodies Corporate | 12,66,527 | 2,28,67,171 | 4,87,25,567 | 2,17,08,529 |
நன்றி :- Bombay Stock Exchange
ஒரு வருடத்தின் விலை மாற்றங்களை வரைபடமாக கொடுத்துள்ளேன் , நிங்களே தீர்மானித்து கொள்ளுங்கள் எவை நல்லவை என்று .
SUN TV
DISH TV
ZEE
ஏதோ புரிந்தது !
ReplyDelete