Fidelis Capital Markets

Tuesday, September 7, 2010

பங்கின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணம்:- 4







ஒரு நிறுவன பங்கின் விலையில் ஏற்படும் ஏற்றம் மற்றும் இறக்கங்களுக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன , அவற்றில் சில மிக முக்கியமானவைகளை நாம் இங்கே பார்ப்போம் . 

முந்தய பதிவு :-1. பொருளாதாரம்
                             2.துறை சார்ந்த வளர்ச்சி
                             3.நிறுவன நிலமை
----------------------------------------------------------------------------------------------------------------------------+

நடப்பு செய்திகள் 

குறுகிய கால முதலீட்டிலும் ,தின வணிகத்திலும் நடப்பு செய்திகள் , மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன ,பங்கின் விலை மாற்றத்திலும், சந்தையின் போக்கை தீர்மானிப்பதிலும் ,நடப்பு செய்திகள் உதவுகின்றன . 

அரசியல் செய்திகள் , நிறுவன செய்திகள் , பொருளாதார செய்திகள் என அனைத்தும் முக்கியமானவையே ,சாதகமற்ற அரசியல் சூழ்நிலை , பொருளாதார சூழ்நிலை சந்தையை சரிவுக்கு இட்டுசெல்லும் , சாதகமான செய்திகள் வளர்ச்சி பாதைக்கு வித்திடும் .

பொதுவாகவே ,இச்செய்திகள் ,trend reversal எனப்படும் சூழ்நிலை மாறும் நிலை உள்ளதை நமக்கு எச்சரிக்கை செய்யும் தன்மை உள்ளதால் ,அனைத்து செய்திகளையும் மிக கவனமாக கவனித்து பின்தொடர்வது நலம் . 

செய்திகளின் முக்கியத்துவம் பொறுத்து சந்தையில் பிரதிபளிப்பு இருக்கும் , அதேபோல் செய்திகள் அதற்குரிய காலகட்டத்தில் வெளிவருவதும் அவசியமே , சரியான காலத்தில் , முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் வெளிவந்தால் ,பங்குசந்தையில் பெரிய அளவில் மாற்றங்களை நாம் காண முடியும் . இவ்வகை செய்திகளே முதலீட்டு தேவைகளை (வாய்ப்புகளை )உருவாக்கி பங்குகளின் விலையில் உயர்வையும் - முதலீட்டு தேவைகளை குறைத்து விளைசரிவையும் ஏற்படுத்துகின்றன . 


உதரணமாக :-இந்திய சந்தைகளில் செய்திகளின் தாக்கம் 

செய்தி :- ABAN Offshore natural gas platform sinks off Venezuela (Date 13/05/2010)

அன்று நாளின் அதிகபட்ச விலை `1228 - குறைந்தபட்ச விலை `1009



கவனித்திற்களா ? - வெறும் 5 நாட்கள்தான் விலை `700 கிழ்  







  • நல்ல ஒரு ஏற்றம் ,
  • பின்பு பெரிய மாற்றம் இல்லாமல் சமதள பயணம் ,
  • அதன் பின் மிகபெரிய சரிவு , ஆனால் சரிவு , உயர்வின் விகித்தில் பாதியில் நிறுத்தப்பட்டது ,
  • மீண்டும் சமதளம் ,
  • பின்பு நாம் குறிப்பிட்ட செய்தியின் தாக்கம்,
  • மீண்டும் சமதளம்,
  •  நிலையான சிறிய ஏற்றம் 
  • இப்பொழுது வரும் எந்த முக்கியமான  செய்தியும் ,நிறுவன பங்கின் விலையில் நல்ல மாற்றங்களை காட்டும்.


3 comments:

  1. very good article thankyou thankyou thankyou

    ReplyDelete
  2. guna said...
    very good article thankyou thankyou thankyou/////


    நன்றி குணா, விமர்சனத்தின் நடுவில் மானே தேனே -பொன்மானே எல்லாம் போட்டுருக்கலாம் இல்ல

    ReplyDelete
  3. நான் புதிதாக பங்கு வர்த்தகம் செய்ய உள்ளேன், குறுகியகல வர்த்தகராக இருக்க விரும்புகிறேன்.... செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்தேன் நன்றி .....

    ReplyDelete