Fidelis Capital Markets

Sunday, September 5, 2010

பங்கின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணம்:- 2














ஒரு நிறுவன பங்கின் விலையில் ஏற்படும் ஏற்றம் மற்றும் இறக்கங்களுக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன , அவற்றில் சில மிக முக்கியமானவைகளை நாம் இங்கே பார்ப்போம் . 










முந்தய பதிவு :- பொருளாதாரம்
------------------------------------------------------------------------------------------------------------



துறை சார்ந்த வளர்ச்சி :-

ஓர் நிறுவன பங்கின் விலை - ஏற்றம் மற்றும் இறக்கங்களுக்கு அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கும் தொழில் துறையின் நிலமை மிக முக்கியமான ஒன்றாகும். எந்த  வகை தொழிலாக இருந்தாலும் ,முகப்பு -வளர்ச்சி -உச்சநிலை -இறக்கம் (சரிவு )என ஒரு முறையான சுழற்சியிலே இருக்கும் . இந்த சுழற்சியை நீங்கள் எந்தவகையிலும் ஒப்பிட்டு பார்க்கலாம் உதாரணமாக - உங்களின் வாழ்கை பயணம் - பொருளாதார நிலைமை - போன்றவற்றில் ஒப்பிட்டு பாருங்கள் -நிச்சயமாக இந்த சுழற்சி இருக்கும். 


நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் அல்லது முதலீடு செய்த நிறுவனம் ஈடுபட்டிருக்கும் தொழில் துறை இந்த சுழற்சியில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் . இதை அறிவதற்கு 

  • குறிப்பிட்ட தொழில் துறையின் முந்தய வருடங்களின் லாபம் - விற்பனை - மற்றும் மொத்த வளர்ச்சி விகிதம் 
  • நடப்பு வருடத்தின் லாபம் - விற்பனை - மற்றும் மொத்த வளர்ச்சி எதிர்பார்ப்பு விகிதம் 
  • நடப்பு வருடத்தின் மாத - காலாண்டு மற்றும் அரையாண்டு பங்களிப்பு விகிதம் 
  • எதிர்பார்ப்பு விகிதத்திற்கும் ,நடப்பு பங்களிப்பு  விகிதத்திற்கும் உள்ள வேறுபாடு 

போன்றவற்றை அறிவதன் மூலம் அந்த தொழில் துறையின் வளர்ச்சியையும் , வணிக சுழற்சியையும் நாம் அறியமுடியும் . 



மேலே குறிபிட்டுள்ள சுழற்சியில் சரிவு என்பது , அந்த தொழில் துறையின் கடைசி அத்தியாயமாகவும்  இருக்கலாம் அல்லது இந்த அத்தியாயத்தின் கடைசி பகுதியாகவும் இருக்கலாம், கன நேர மௌனத்திற்கு பின் மீண்டும் துளிர் விடலாம் . 



சரிவு என்றால் எங்காவது நின்றே ஆகவேண்டும் அல்லவா? (அவ்வாறு நிறுத்த முடியவில்லை என்றால் அது அத்துறையை இழுத்து முட செய்துவிடும் ) அவ்வாறு நின்ற பின் சிறுது காலம் சமதளத்திலே பயணம் இருக்கும் , இந்த சமதளம் தான் அடுத்த ஏற்றத்தில் ஏற துறையை தயார்படுத்தும் . Refresh center



சிலவற்றை சமயோஜிதமாக தீர்மானிக்கவும் தவறிவிட கூடாது , எல்லாத்துக்கும் கூட்டி, கழித்து , அலசி , ஆராய்ந்து பார்த்துகொண்டிருக்க தேவை இல்லை , சந்தேகங்கள் ஏற்பட்டால் மட்டுமே ஆராய்ந்தால் போதுமானது . உதரணமாக - பணவீக்கம் அதிகமாகவும் ,தனிமனித வருமானம் குறைந்தும் இருக்கும் நிலையில் ,மக்கள் ஆடம்பர செலவை குறைத்தும் அல்லது தவிர்த்தும் இருப்பார் , இந்த சூழ்நிலையில் ஆடம்பர பொருட்கள் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் கடினமான காலகட்டங்களை சந்தித்து கொண்டிருக்கும் , ஆக அத்துறையை , தற்போது தவிர்பதுதானே நலம் , ஆனால் துளிர் விடும் தருணத்திற்காக அத்துறையை பார்த்துகொண்டு இருக்க வேண்டும் . 

"ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு"





தனிப்பட்ட தொழில் துறையின் அட்டவணை (இந்தியா)








மறக்காமல் தங்களின் கருத்துகளை  பகிரவும் !

1 comment: