நிறுவனத்தின் financial analysis என்பது அந்நிறுவனத்தின் liquidity and solvency (மன்னிக்கவும் தமிழில் தெரியவில்லை ) பற்றி ஆராய்வது ஆகும் . இவ்விரண்டும் நல்ல நிலையில் இல்லாத நிறுவனங்கள் சிறப்பான முதலீட்டிற்கு தகுந்தவைகளாக இருக்காது .
நிறுவனத்தின் குறுகிய கால தேவைகளை , அந்நிறுவனம் சுயமாக பூர்த்தி செய்து கொள்ளும் திறன் உள்ளதா என்பதை அறியவே இந்த பகுதி எனலாம் . பொதுவாக fundamental analysis யின் எல்லா இடங்களிலும் ratio analysis எனப்படும் கணக்கியல் முறைகளை பயன்படுத்துவார்கள் .
ratio அனலிசிஸ் முறை , நிறுவனத்தை பற்றி எளிதில் புரிந்து கொள்வத்தற்கான எளிய வழியாகும் . ratio analysis பற்றியும் அதன் வகைகளை பற்றியும் பார்ப்பதாயின் , அது பட்டபடிப்பிறக்கு படிப்பது போன்றே ஆகிவிடும் . அதனால் அதில் இருந்து ஒன்றை மட்டும் பார்த்து வைக்கலாம் .
current ratio
நிறுவனத்தின் நடப்பு சொத்துக்களையும் , பொறுப்புக்களையும் பற்றி எளிதில் புரிந்து கொள்ள உதவும் ratio வே இந்த current ratio ஆகும் .
உதாரணமாக :-
ஓர் நிறுவனத்தின் நடப்பு சொத்தின் மதிப்பு = `250000
நடப்பு பொறுப்புக்கள் ********************************= ` 100000
current ratio **********************************************= current asset / current liability
= 250000/100000
= 2.5 : 1
current ratio 2.5 எனலாம் , அதாவது 2.5 மடங்கு சொத்திற்கு நிறுவனம் ஒரு மடங்கு பொறுப்பு கொண்டுள்ளது . இந்த உட்பிரிவை இந்த அளவில் வைத்து கொண்டு , முதன்மை பிரிவான financial analysis க்கு வருவோம் .
மேற்குறிய ratio analysis யை கொண்டு
- நிறுவனத்தின் நடப்பு சொத்து & பொறுப்புகளை பற்றியும்
- குறுகிய கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் திறன் பற்றியும்
- நிறுவனம் விற்பனை மூலம் கொடுத்துள்ள கடன்கள் ,
- வேறுவகையான கடன்கள்
- கடன்களை திருப்ப பெரும் முறை
- கடன்களை திரும்ப பெற ஆகும் நாட்டகள்,
- சரக்கு இருப்பிற்கும் , விற்பனைக்கும் உள்ள வேறுப்பாடு
- செயல் முறை மூலதனத்தை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி அறிவதே இந்த financial analysis பகுதியாகும் .
--
No comments:
Post a Comment