Fidelis Capital Markets

Thursday, September 9, 2010

நல்ல பங்கை தேர்வு செய்யும் வழிகள்





next post on  Monday


பங்குசந்தையில் எதையும் அறிதியிட்டு கூற முடியாது , கூடுமானவரை என்பது உத்தமம் . ஒரு பங்கின் போக்கை தீர்மானிப்பது என்பது வானிலை அறிக்கை தயாரிப்பது போன்றதே - மழை பெய்யும் என்றால் , பெய்தே ஆகவேண்டும் என்பதில்லை , பெய்யாமலும் போகலாம் , அறிக்கை தயாரித்த நேரத்தில் , மழை பெய்வத்துற்குரிய சாதகமான சூழ்நிலை இருந்திருக்கும் ,அதன் பின் வானில் நடந்த மாற்றங்களுக்கு வானிலை அறிஞர் பொறுப்பாக முடியாது , இருப்பினும் அறிக்கை தயாரிக்கும் பொழுது அனைத்து காரண காரணிகளையும் சரியான விதத்தில் , சரியான விகித்தில் பயன்படுத்தபட்டுள்ளதா என்பதை வானிலை அறிஞர்தான் அறுதியிட்டு கூறவேண்டும் . இதைபோன்றே ஒரு நல்ல பங்கை தேர்தெடுப்பது என்பதும் , இதை எப்பொழும் மறக்க கூடாது . 

பொதுவாக பங்குசந்தியில் நல்ல பங்கை தேர்வு செய்ய இரண்டு முறைகளை பின்பற்றி வருகின்றன , அவைகள் முறையே 

1. Fundamental analysis 
2. Technical analysis 

இவ்விரண்டு வழிமுறைகளை தனித்தும் , இரண்டு முறைகளை சேர்த்தும் பங்குகளை தேர்வு செய்கின்றனர் .

  • நல்ல பங்கை தேர்வு செய்யும் பொழுது சாதகமான காரணங்களை பட்டியலிட்டும் , பாதகமான காரணங்களை பட்டியலிட்டும் -
  • சாதகமான காரணங்கள் அதிகமாயின் அவைகளை வாங்குவத்தற்கும் -
  • பாதகமான காரணங்கள் அதிகமாயின் விற்பதற்கும் -
  • இரண்டும் சரிசமமாயின் , எந்த செயலும் (வாங்க / விற்க ) செய்யாமல் இருந்து ,அதன் போக்கை நிர்னையத்த பின் செயலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் .

இந்த சாதக /பாதக காரணங்களை கண்டறிய உதவுவதே fundamental & technical analysis ஆகும் . 

fundamental analysis

                      fundamental analysis என்பது , நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைகள் , நடப்பு விபனை விகிதம் , லாபம் , ஒரு பங்கின் ஆதாயம் போன்ற காரணிகளை ஆராய்ந்து அறிவதும் , மேலும் இக்காரணிகளை கொண்டு நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சியை கணிப்பதும் FA எனலாம் .

சுருங்க சொல்வதாயின் , FA என்பது ,நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளை கொண்டு அந்நிறுவனத்தின் வருங்கால போக்கை கணிப்பது எனலாம் . 

FA மேற்கொள்ளவது என்பது சற்று கடினமான ஒன்றாகவே இருக்கும் , இதற்க்கு நாம் ஒரு தணிக்கையாளரை போல் செயல்பட வேண்டியிருக்கும் , ஆனால் தற்பொழுது நிறைய நிறுவனங்கள் , பத்திரிகைகள் , இன்னயதளங்கள் ,ஓர் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளை பிரித்து மேய்ந்து, FA செவ்வனே செய்து ,இலவசமாக பிரசுரம் செய்கின்றன , மேலும் சில நிறுவனங்கள் அவைகளை விற்பனை செய்கின்றன . 

ஓர் நிறுவனத்தின் பங்குகளின் மேல் முதலீடு மேற்கொள்வதன் முன் அந்நிறுவனத்தின் fundamental விசயங்களை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் , நாம் FA மேற்கொள்ள முடியவிட்டாலும் ,இவ்வகையான அறிக்கைகளை படித்து புரிவத்தற்குரிய அறிவாற்றலை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் ,ஆகவே இந்த சிறப்பான FA -இல் அறிந்து வைத்திருக்க வேண்டிய சில நல்ல முக்கியமான விசியங்களை நாம் இங்கே பார்ப்போம். 

1 comment:

  1. நிறுவனத்தின் FA இலவசமாக கிடைகிறது என்பதை தெரிந்துகொண்டேன்.. BUT எந்த இணையதளத்தில் கிடைக்கும் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

    ReplyDelete