Fidelis Capital Markets

Friday, May 20, 2011

Bullish & Bearish Harami


Bullish Harami


Bullish Harami என்பது முந்தய நாளின் நீண்ட பெரிய கருப்பு candle stick , இரண்டாவது நாளின் வெள்ளை candle stick யை முழுவதுமாக ஆட்கொள்ளும் . இது சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் , மேலும் தொடர்ந்து வந்த சரிவு நிலை இனி தொடராது எனவும் , சந்தையில் விற்பனை செய்பவர்கள் குறைந்து , புதிய குறைந்த பட்ச நிலையை தொடமுடியாத நிலை ஆகவே சந்தை வாங்குபர்கள் கையில் , அதாவது கலையின் ஆதிக்கத்தின் தொடக்க நிலை என சுட்டி காட்டும் அமைப்பே இந்த Bullish Harami அமைப்பாகும் . 




Bearish Harami 

Bearish haramiஅமைப்பு என்பது முந்தி நாளின் பெரிய வெள்ளை candle stick  இரண்டாவது நாளின் கருப்பு candle stick யை முழுவதுமாக ஆட்கொள்ளும், தொடர்ந்து மேல் நோக்கி சென்ற நிலை மாறி ,சந்தை கரடிகளின் கைகளுக்கு செல்லதயராக உள்ளதை உணர்த்தும் அமைப்பு ஆகும் . 



Wednesday, May 18, 2011

Harami Candlestick Pattern 1

Harami Candlestick Pattern 

இவ்வகை அமைப்புக்கள் இரு நாள் Candlestick அமைப்பை ஒப்பிட்டு அமைவது ஆகும் . இதை engulfing அமைப்பிற்கு எதிர்பதமாக கொள்ளலாம் . அதாவது , harami candlestick அமைப்பு , engulfing அமைப்பை போன்று ஒரு candlestick இன்னொன்றை முழுவதுமாக ஆட்கொள்ளும் வடிவில் அமையும் , ஆனால் engulfing அமைப்பில் முதல் நாள் candlestick யை இரண்டாவது நாள் ஆட்கொள்ளும் , harami அமைப்பில் இரண்டாவது நாள் candlestick யை முதல் நாள் ஆட்கொள்ளும் வடிவில் இருக்கும் . 



















மேலும் harami  அமைப்பில் முதல் நாள் முடிவு விலைக்கும் , இரண்டாவது நாள் தொடக்க விலைக்கும் நல்ல இடைவெளி இருக்கும் . இதுவும் ஒரு எச்சரிக்கை அமைப்பாகும் , தொடர்ந்து வந்த நிலை இனி மாறும் என்பதை சுட்டிக்காட்டும் . பொதுவாக சந்தை தொடர்ந்து சரிவிலோ அல்லது உச்சத்திலோ இவ்வகை அமைப்புகள் தோன்றினால் நல்ல பலன் தரும் . harami  அமைப்பில் இரு வகைகள் உள்ளன அவைகள் அடுத்த பதிவில் ..


Tuesday, May 17, 2011

Bullish &Bearish Engulfing

Bullish Engulfing 

Bullish Engulfing என்பது முதல் நாள் கரடி வகை (கருப்பு ) candle stick யை இரண்டாவது நாள் காளை(வெள்ளை ) candle stick முழுவதுமாக ஆட்கொள்வது Bullish Engulfing ஆகும் . பொதுவாக இந்த வகை அமைப்புகள் சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் . இந்த அமைப்புகள் தோன்றினால் , சந்தை சரிவில் இருந்து மீண்டும் மேல்நோக்கி நகர ஆயுத்தமாகி இருப்பதை உணர்த்தும் , இவ்வாறு அமைப்புகள் தோன்றும் பொழுது மற்ற காரணிகளை கவனத்தில் கொண்டு முடிவெடுப்பது நன்று . 

Bearish Engulfing  

இது மேல் சொன்ன Bullish Engulfing யின் எதிர்பதம் எனலாம் . அதாவது முதல் நாள்காளை(வெள்ளை )candle stick யை இரண்டாவது நாள் கரடி வகை (கருப்பு )  candle stick முழுவதுமாக ஆட்கொள்வது Bearish Engulfing ஆகும் . பொதுவாக இந்த வகை அமைப்புகள் சந்தை உயர்வில்  இருக்கும் பொழுது தோன்றும் . இந்த அமைப்புகள் தோன்றினால் , சந்தை சரிவுக்கு தயாராக உள்ளதை உணர்த்தும் 


Thursday, May 5, 2011

Tuesday, May 3, 2011

Monday, May 2, 2011

Sunday, May 1, 2011

TODAY NIFTY LEVELS-02/05/2011


UPSIDE
 5802
5830 
 5847
 5864
 5912
DOWNSIDE
 5716
5702
 5780
5764 
 5625