உலக பொருளாதார வீழ்ச்சியின் பொது சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $70 -க்கு வணிகம் ஆனது , ஆனால் தற்பொழுது அது $120 க்கு வணிகம் ஆகிறது . இந்த விலை ஏற்றம் வரும் காலத்தில் உயரவே அதிக வாய்ப்புகள் உள்ளன .
அதிவேகமாக வளர்ந்தது வரும் தேவையும் , தற்பொழுது நிகழும் லிபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் புரட்சியும் , நாடுகளின் அரசியல் நிலையட்ற்ற தன்மை ஆகியவற்றுடன் இயற்கை பேரழிவு ஆகிய நிகழ்வுகள் சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர காரணமாகின . இந்த சிக்கலான தருணத்தை விட்டு வைப்பர்களா ஊக வணிகர்கள் , அவர்களின் பங்களிப்பு இல்லாமலா விலை உயர்வு ?
தற்பொழுது நிலவரப்படி சந்தையில் ஒரு பேரல் கச்ச எண்ணெய் $150 - $160 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது . இந்த அளவிற்கு சர்வேதேச சந்தையில் விலை உயர்ந்தால் , உள்ளூர் எண்ணெய் நிறுவனங்கள் சும்மா இருக்குமா ? நிச்சயம் உள்ளூர் எண்ணெய் விலையும் உயரும் . (இப்பவே உயர்த்தி இருக்கவேண்டும் , வரும் மாநில தேர்தல்களே விலை உயர்வை நிறுத்தி வைத்திருகின்றன .) பெட்ரோல் விலை உயர்வால் விலைவாசி ...... மேலே மேலே மேலே போய்நிக்கும். ஆதனால பணவீக்கமும் உயர்ந்தது , நாட்டின் மொத்த உள்ள நாட்டு உற்பத்தி குறையவும் வாய்ப்பு உள்ளது .
No comments:
Post a Comment