Fidelis Capital Markets

Wednesday, March 9, 2011

நீளமான மற்றும் குறுகிய நேர்கோடுகள்


பொதுவாக , candle stick மேல உள்ள நேர் கோடானது நீண்டும் , கீழே உள்ள நேர் கோடானது குறுகியும் இருப்பின் , தின வணிகத்தில் முதன் பாதி காளைகளின் ராஜ்ஜியமும் , பிற்பாதியில் கரடிகளின் ஆதிக்கம் உள்ளதை காட்டும். முற்ப்பகுதியில் பங்கின் விலை அதிக premium த்துடன் இருக்கும் . இந்த premium விலையை முதலீட்டளர்கள் பயன்படுத்த , பங்குகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள் , இவ்வகை செயலின் விளைவால் , பங்கின்
 விலை பிற்பகுதியில் கீழ் நோக்கி செல்லும் . ஆதாவது தேவையை விட அளிப்பு அதிகமானால் விலை குறையும் என்ற விதியின் படி சந்தை நகரும் . 





இதற்க்கு எதிர்பதமே , குறுகிய மேல் நேர்கோடுகளும் , நீளமான கீழ் நேர் கோடுகளும் உள்ள candle stick  அமைப்பு . நாளின் தொடக்கத்தில் விற்பனை செய்வதில் ஆர்வத்துடன் முதலீட்டளர்கள் இருந்ததால் விலை சரிவு ஏற்படும் , இந்த விலை சரிவை பயன்படுத்தி வாங்குவதில் ஆர்வம் காட்டிய காளைகளால் சந்தை சரிவிலிருந்து மீண்டிருக்கும் . 

No comments:

Post a Comment