Fidelis Capital Markets

Monday, August 30, 2010

SEBI - securities exchange board of India .

        இந்த அமைப்பு , ஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடுவதற்கு முன்னும் , வெளியிட்ட பின்னும் , அந்நிறுவனத்தை தகுந்த முறையில் கட்டுபடுத்தி நிறுவன மோசடிகள் மற்றும் முறைகேடுகள் அகியவற்றிலிருந்து முதலீடலர்களை பாதுகாக்க இந்த அமைப்பு உதவியாக உள்ளது. 

முதலீட்டளர்களின் பாதுகாப்பு , நலன் , நாட்டின் வளர்ச்சி , அந்நிய முதலீடலர்களை கட்டுப்படுத்துதல் ,உள்நாட்டு நிறுவன முதலீடலர்களை வழிபடுத்துதல் ஆகியவை இந்த அமைப்பின் உன்னத நோக்கம் ஆகும் . மேலும் பங்குசந்தையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களை தனித்தும் , அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கும் துறைசார்ந்த அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டாகவோ , அந்நிறுவனத்தை முறைபடுத்தி முதலீட்டளர்களை பாதுகாக்கிறது . 

மேலும் , பங்குசந்தையில் ஈடுபட்டிருக்கும் தரகு நிறுவங்களை கட்டுபடுத்தி , மோசடிகளை தவிர்க்கவும் , முறையான தணிக்கை மேற்கொண்டு தவறுகளை களைவதும் இதன் முதன்மையான பணியாகும் . இந்த  
அமைப்பு , செபி சட்டம் 1992 கீழ் உருவாக்கப்பட்டு , செயல்பட்டு வருகிறது . முதலீட்டளர்கள் , அவர்களின் குறைகள் , மோசடிகள் குறித்த புகார்களும் செபி -யிடம் பதியலாம் . மொத்தத்தில் முதலீட்டளர்களின் பாதுகாப்பு அரணாக இருந்துவருகிறது . மேலும் தகவல் அறிய http://www.sebi.gov.in/ . 

2 comments:

  1. நல்ல தகவல்

    ReplyDelete
  2. nis (Ravana) said...
    நல்ல தகவல்

    தங்கள் பதிவிற்கு வந்து சிறபித்தமைக்கு நன்றி நண்பரே ,

    ReplyDelete