Fidelis Capital Markets

Friday, August 27, 2010

பங்கு சந்தை

பங்கு சந்தை :-

                       பங்கு சந்தை என்பது நிறுவன பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான களம் ஆகும் . அதாவது ஒரு நிறுவன பங்குகளை ஒரு முதளிட்டலரிடமிருந்து ,மற்றொருவருக்கு வாங்குவதற்கும் , விற்பதற்குமான இடமே பங்கு சந்தை ஆகும் . 

பங்கு சந்தை வகைகள் :- 

                       பங்கு சந்தையை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் . அவைகள் முறையே 

                          1.Primary Market        (ப்ரைமரி மார்க்கெட் )
                          2.Secondary Market (செகண்டரி மார்க்கெட் )

Primary Market        (ப்ரைமரி மார்க்கெட் ) :- 

                 ப்ரைமரி மார்க்கெட் என்பது , ஒரு நிறுவனம் அதன் வளர்ச்சி பணிகளுக்கான மூலதனத்தை , பொதுமக்களிடம் இருந்து பெறும்பொருட்டு , முறையே அரசு ,செபி மற்றும் அதன் தொழில் சார்ந்த அமைப்புகளிடமிருந்து முறையான அனுமதி பெற்று , மக்களை நாடி மூலதனத்தை திரட்டும் இடமே ப்ரைமரி மார்க்கெட் எனப்படும். 

சுருங்க சொல்வதாயின் நிறுவனம் நேரடியாக மக்களை நாடி மூலதனத்தை திரட்டும் இடமே ப்ரைமரி மார்க்கெட் எனப்படும்.  இவ்வாறு நிறுவனம் பொதுமக்களை நாடும் முறைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் . அவை முறையே 

1. IPO   - Initial public offering (இன்சியல் பப்ளிக் அப்-பரிங் )

2. FPO - follow on  public offering (பாலோ ஆன் பப்ளிக் அப்-பரிங் )

IPO 

   IPO என்பது "முதன் முறையாக " ஒரு நிறுவனம் பொதுமக்களை அதன் மூலதனத்திற்காக நாடுவதையே IPO என்கிறோம் . இதுவரை அந்நிறுவனம் தன்சுய மூதலீட்டில் இயங்கிகொண்டிருந்திருக்கும் , அதன் வளர்சிக்காகவும் , விரிவாக்க பணிக்காகவவும் நிதியை திரட்ட , நிறுவனம் பொது மக்களை நடுவதை IPO என்கிறோம் .

FPO 
FPO  என்பது , ஏற்கனவே ஒரு நிறுவனம் பொதுமக்களை நாடி மூலதனத்தை திரட்டி , அந்த நிதி கொண்டு தொழில் செய்துகொண்டிருக்கும் , மேலும் அதன் வளர்சிக்காக ,அந்நிறுவனம் மறுபடியும் மக்களை நாடி மூலதனத்தை திரட்டுவது  follow on  public offering  எனப்படும் . 

1 comment: