பங்குசந்தையில் ஈடுபடுவதை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் . அவைகள் முறையே
1 . முதலீட்டு முறை --
சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளில் , சில குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது நாம் நினைத்த லாபம் வரும்வரை முதலீடு செய்வது எனலாம் .
உதரணமாக :-
நாம் அனைவருக்கும் தெரிந்த வகையில் சொல்வதாயின் , நிலமுதலீட்டை எடுத்துகொள்ளலாம் , ஒரு நிலம் வாங்கினால் , பெரும்பாலும் , அதன் விற்பனையை தீர்மானிப்பது , நமது பணதேவைகளோ ,அல்லது நல்ல லாபகரமான விலையாகத்தான் இருக்கும் . அதுபோலவே நீண்ட கால , குறிகிய கால முதலீட்டை கூறலாம் .
நல்ல நிறுவன பங்குகளின் மீது , நீண்ட கால மற்றும் குறுகிய கால முதலீடு செய்வது என்பது சிறந்ததாக இன்றுவரை உள்ளது , மேலும் மற்ற வகைகளை விட இந்த முறை பாதுகாப்பாக இருக்கிறது .
செய்யகூடதவை
பாதுகப்பனது ,நீண்ட கால முதலிடு என்று சொல்லி , ஏதோ ஒரு நிறுவன பங்குகளை வாங்கிவிட்டு , அதை கவனிக்காமல் , 3 -5 வருடம் கழித்து பார்த்தல் அவைகள் காணமல் கூட போகும் ,போகிறபோக்கில் , விழா எடுத்து ,100 மரகன்றுகளை நட்டுவிட்டு , புகைப்படம் எடுப்பதில்லை இந்த முதலீடு என்பது , இதெல்லாம் விளம்பர பிரியர்களின் வழி , நமக்கு அந்த வழி வேண்டாம் , முறையாக , மண்ணின் தன்மை , சிதோசநிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு , அதற்கேற்ப மரக்கன்றை பதியவிட்டு , தேவையானபொழுது , நீர்ருற்றி , உரமேற்றி அரவணைத்தால் மட்டுமே , வருங்கால கனி ருசிக்கும் , இல்லைஎன்றால் , மரம் வளருமா ? , வளர்ந்தாலும் கனி கிடைக்குமா ? என குழப்பமான கேள்விகள் மட்டும் கிடைக்கும் , கனி கிடைத்ததால் உங்கள் அதிர்ஷ்டம் .
யூக வணிகம் : -
யூக வணிகம் : -
யூக வணிகம் என்பது ,அதன் பெயரில் உள்ளதைப்போல் , யூகத்தின் அடிப்படையில் ஆனது , பங்குகளின் விலையில் ஏற்படும் ஏற்ற ,இறக்கங்களை பயன்படுத்தி லாபம் பார்ப்பது . பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்களை முன்னரே யூகித்து வணிகத்தில் ஈடுபடுவது யூகவநிகமாகும் .
இதில் தினவணிகம் என்பது , ஒரு குறிப்பிட்ட நாளில் , சந்தை முடியும் முன்னரே , பங்குகளை வாங்கி இருந்தால் அதை விற்றும், விற்றிருந்தால் வாங்கியும், கணக்கை நேர்செய்து , லாபா நட்டகளை பார்ப்பது தினவணிகம் ஆகும் . இவ்வகை வணிக முறைகளில் , நடைமுறையில் , தரகு நிறுவனங்கள் நாம் முதலீடு செய்த தொகைக்கு 3-5 மடங்கு வரை வணிகம் செய்ய அனுமதிக்கலாம் , அனால் ஒரே ஒரு கண்டிஷன் , வணிகம் அந்த குறிப்பிட்ட நாளுக்குள் முடித்தாக வேண்டும் . இல்லை என்றால் வாங்கி இருக்கும் பங்குகளின் முழு மதிப்பிற்கு காசோலை கொடுக்க வேண்டும் . அவ்வாறு முழு தொகை கொடுத்தால் , அப்பங்குகள் உங்களின் டிமேட் கணக்கிற்கு சென்றடையும் , அவைகள் முதலீடுகளாக மாறும் .
No comments:
Post a Comment