Fidelis Capital Markets

Wednesday, August 25, 2010

2. ஒதுக்கீடு

                          இந்த பகுதியில் , எவ்வளவு தொகையை பங்கு சந்தையில் முதலிடு செய்யபோகிறிர்கள் (நீங்கள் தயாரித்த financial plan-படி அல்லது உங்களின் financial planner கொடுத்த அறிவுரையின் படி ) சந்தையில் உள்ள வணிகமுறைகளில் எதனை தேர்வு செய்ய போகிறிர்கள் , அதன் விகிதாசாரம் எவ்வளவு? என்பதை பற்றி பார்க்கலாம் .

உதரணமாக - மொத்த சேமிப்பில் 25% பங்கு முதலிடு என்று வைத்துக்கொண்டால் , அந்த 25சதவிகிதத்தில், எத்தனை சதவிகிதம் தினவணிகம் , நீண்ட மற்றும் குறுகிய கால முதலிடு என்பதை , முதலிடு மேற்கொள்வதற்கு முன் , நமக்கு தேவையான , சரியான விகிதத்தில் ஒதுக்கீடு செய்து வைத்திருக்க வேண்டும் . எப்பொழுதும் காலம நமக்கு சாதகமாகவே இருக்காது , சில சமயம் மாறும் , அப்படிப்பட்ட நேரங்களில் , கொண்டு வந்த 25 சதவிதத்தையும் இழந்து , அந்தோ பரிதாப நிலையில் , மட்டிக்கொள்ளகூடாது. அதற்குத்தான் இந்த மாதிரி முதலீட்டை பிரித்து முதலிட்டை மேற்கொள்வதன் மூலம் , Risk -கை நாம் கூடுமானவரை குறைத்துகொள்ளலாம் . 

உதரணமாக :- 

மொத்த சேமிப்பு -------------  = ரூ . 10,00,000/- என்க, 

பங்கு சந்தை - ஒதுக்கீடு --= 25% =>  10,00,000*25/100

                                            = ரூ .2,50,000 /-

மேலும் இந்த ஒதுக்கீட்டை கிழ்க்கண்டவாறு பிரிக்கலாம் .

 பங்குச்சந்தை முதலீடு 
               |
               |
               ->     நீண்டகால முதலீடு----- ->40%  (Rs,1,00,000)
               |
               ->     குறுகிய கால முதலீடு---->30%  (Rs.75,000)
               |  
               ->     தினவணிகம் ---------------> 30%  (Rs.75,000)

மேற்கூறியவை உதாரணம் மட்டுமே , காலம் , நேரம் , உங்களின் வயது வருமானம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவை பொறுத்து மாறுபடும். 



No comments:

Post a Comment