Fidelis Capital Markets

Saturday, August 28, 2010

செகண்டரி மார்க்கெட்

செகண்டரி மார்க்கெட் :-


                          செகண்டரி மார்க்கெட் என்பது நேரடியாக நிறுவனத்திடம் இல்லாமல் , வேறு ஒரு முதலீட்டளரிடமிருந்து பங்குகளை வாங்குவதற்கும் , விற்பனை செய்வதற்கும் ஆனா இடமே செகண்டரி மார்க்கெட் எனப்படும். 

                            அதாவது ,IPO / FPO என பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள் , முறையாக பங்கு விண்ணபித்த முதலீட்டளருக்கு அந்நிறுவனம் , முறையாக ஒதுக்கீடு செய்த பின்னர் , stock exchange- இல் வர்த்தகத்திற்காக  listing - செய்யப்படும் . அவ்வாறு listing - செய்யப்பட்ட பங்குகள் ஒரு முதலீட்டளரிடமிருந்து இன்னொருவர் வாங்குவதற்கும்,  விற்பனை செய்வதற்கும் ஆனா இடமே செகண்டரி மார்க்கெட் எனப்படும். 


                        
                            IPO & FPO என பொதுமக்களை நாடி வரும் நிறுவனங்கள் முறையே மத்திய மற்றும் மாநில அரசின் கட்டுபாடுகளை பின்பற்றி , அனுமதி பெற்றிர்ருக்கும் . மேலும் SEBI (securities exchange board of india ) மற்றும் ministry of company affairs, நிறுவனம் ஈடுபட்டிருக்கும் தொழில் துறையை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளிடமிருந்து அனுமதி பெறவேண்டும் . உதரணமாக - நிதி நிருவனமாயின் RBI -Reserve bank of India , காப்பிட்டு நிருவனமாயின் IRDA-Insurance Regulatory and Development Authority,தொலைதொடர்பு நிருவனமாயின் TRAI-  The Telecom Regulatory  Authority of India  போன்றவற்றின் அனுமதி பெறவேண்டும் . 

                        மேற்கூறிய அனுமதி பெற்றதனால் மட்டுமே , இவைகள் நல்ல பங்கு ஆகாது , இந்த அனுமதிகள் எல்லாம் , இந்த தடத்தில் செல்லவதற்கு உண்டான அனுமதி சீட்டு அல்லது நுழைவு சீட்டு என்றே கொள்ளலாம். நிறுவனத்தின் நிதிநிலைமை , வருங்கால வளர்ச்சி , தற்போதிய பொருளாதார சூழ்நிலை ஆகியவை நிறுவன பங்கின் வளர்ச்சியை நிர்ணயக்கும் காரணிகளாகும் . இந்த காரணிகளை பற்றி பின்னேர் விரிவாக பார்போம் . 

No comments:

Post a Comment