Fidelis Capital Markets

Thursday, October 21, 2010

OHLC BAR CHART



O - OPEN 
H - HIGH 
L - LOW
C - CLOSE

இந்த வகை வரைபடத்தில் , குறிப்பிட்ட நாளின் அனைத்து விலைகளை நம்மால் அறியமுடிகிறது ( தொடக்க , இறுதி , குறைந்த & அதிகபட்ச விலைகளை ) மேலும் சந்தையின் போக்கை தீர்மானிப்பதற்கும் , volatility -யை எளிதில் அறிந்து கொள்வதற்கும் இவ்வகை வரைபடங்கள் உதவுகின்றன. முன்னர் பார்த்த line chart - இல் இவைகளை அறியமுடியாது . 


  • இவ்வகை வரைபடத்தில் உள்ள நேர் கோட்டின் கீழ்பகுதி , நாளின் குறைந்தபட்ச விலையையும் ,
  • வரைபடத்தில் உள்ள நேர் கோட்டின் மேல்பகுதி அதிகபட்ச விலையையும் குறிக்கும் . 
  • மேலும் இடதுபுறம் உள்ள பக்கவாட்டு கோடு , அந்நாளின் தொடக்க விலையையும் , 
  • வலது புறம் உள்ள பக்கவாட்டு கோடு நாளின் முடிவு விலையையும் குறிக்கும் .
  •  நேர் கோட்டின் நீளமானது , அந்நாளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிக்கும்  அதாவது volatility குறிக்கும் . 



  • வரைபடத்தில் வலது புறம் உள்ள பக்கவாட்டு கோடு ( தொடக்க விலை ) கீழ் இருந்து , இடது புறம் உள்ள பக்கவாட்டு கோடு மேல் இருந்ததால் , அந்நாள் ஏறுமுக நாளாகவும் , 
  • வலது புறம் உள்ள பக்கவாட்டு கோடு ( தொடக்க விலை )  மேல்  இருந்து , இடது புறம் உள்ள பக்கவாட்டு கோடு கீழ் இருந்ததால் , அந்நாள் இறங்கு முக நாளாகும் . 

இவ்வரைபடத்திற்கு நிறம் கொடுப்பதாயின் , முந்தைய நாளின் முடிவு விலையை விட , இந்நாளின் முடிவு விலை அதிகமாக இருப்பின் பச்சை நிறமாகவும் ( அதாவது ஏறுமுக நாளாகவும் ) , முந்தைய நாளின் முடிவு விலையை விட , இந்நாளின் முடிவு விலை குறைவாக  இருப்பின் சிவப்பு நிறமாகவும் ( அதாவது இறங்கு முகமக நாளாகவும் ) , காட்டும் .  



No comments:

Post a Comment