Fidelis Capital Markets

Sunday, October 24, 2010

Hammer & Hanging Man Candle Stick


Hammer candle stick அமைப்பு அதன் பெயரில் உள்ளது போல் , சுத்தியல் வடிவத்தை கொண்டிருக்கும் , Hammer & Hanging Man Candle Stick அமைப்புகள் ஒன்று போலவே தோன்றம் அளித்தாலும் , இவை தோன்றும் இடம் முற்றிலும் எதிர் எதிர் இடமாகும் , இதனால் விளைவுகள் முற்றிலும் மாறி இருக்கும் . 

தனித்தன்மை - சந்தையின் போக்கில் மாற்றம் உண்டாகும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை எச்சரிக்கும் அமைப்புகளே இந்த Hammer & Hanging Man Candle Stick

Hammer  Candle Stick 

சந்தை அல்லது பங்கின் விலை இறங்கு முகமாக இருக்கும் பொழுது , இவ்வித அமைப்புகள் தோன்றும் , இந்த அமைப்புகள் தோன்றும் அந்த குறிப்பிட்ட நாளில் , வணிக தினத்தின் முற்பாதியில் கரடிகளின் பிடியில் சிக்கி விலையில் சரிவை சந்தித்து இருக்கும் , பிற்பாதியில் காளையர்களின் வலுவான கைகள் ,விலையை சரிவிலிருந்து மீட்டு ,உயர்த்த பட்ச விலையில் நாள் முடிவு பெறுவதாக இருக்கும் . தொடக்க விலையை விட முடிவு விலை சற்று அதிகமானதாக இருந்து , இந்த சுத்தியல் அமைப்பை தோற்றுவிக்கும் . 



Hanging Man Candle Stick

Hanging Man Candle Stick என்பது Hammer  Candle Stick  எதிர்பதம் என வைத்து கொள்ளலாம் . சந்தை ஏறுமுகமாக இருக்கும் பொழுது தோன்றும், வணிக தினத்தின் முற்பாதியில் காளையின் பிடியிலும் , பிற்பாதி கரடியின் பிடியில் சிக்கி சரிவை சந்தித்து இருக்கும் , முடிவின்  பொழுது , நாளின் குறைந்த பட்ச விலையை விட ,முடு விலை சற்று அதிகமானதாக இருக்கும் . 


பொதுவாக Hammer இறங்கு முகத்தில் , வெள்ளை  Candle Stick ஆக தோன்றும் ,Hanging Man என்பது ஏறுமுகத்தில் கருப்பு Candle Stick
ஆக தோன்றும் . இவைகள் சந்தை பயணித்து வந்த பாதை மற்றும் போக்கு மாறுவதற்குண்டான எச்சரிக்கை சின்னங்கள் ஆகும் . 

ஏறுமுகத்தில் உள்ள சந்தை , இறங்குமுகத்திர்க்கு மாற தாயராக உள்ளதை Hanging Man Candle Stick அமைப்பிலும் , இறங்குமுகத்தில் உள்ள சந்தை காளை பிடிக்கு மாறுவதை Hammer Candle Stick அமைப்பிலும் நாம் அறிந்து கொள்ளலாம் . 





No comments:

Post a Comment