Fidelis Capital Markets

Friday, October 22, 2010

candle stick chart



இவ்வகை வரைப்படங்கள் ஜப்பானியர்கள் கண்டரிந்தமுறை . இதுவே இன்றைய தினத்தில் அதிகம் பயன்படுத்தும் முறையும் கூட , குறிப்பிட்ட நாளின் , தொடக்க விலை , முடிவு விலை , உயர்ந்த பட்ச மற்றும் குறைந்த பட்ச விலைகளை கொண்டு வரையப்படுகின்றன . இவ்வரைப்படத்தை பார்க்கும் பொழுது ஒரு மெழுகுவர்த்தியை பார்ப்பது போன்று உருவம் கொண்டிருப்பதனால் , இவைகளை  candle stick chart  என அழைக்கபடுகிறது . 














மற்ற வரைப்படங்களை விட இம்முறையில் தனித்தன்மைகள் அதிகம் , ஒவ்வொரு candle stick -க்கும் தனிதனி விதிமுறைகளை கொண்டதாக இருக்கும் . இவற்றை தனித்தனியாக பார்க்கும் பொழுது ஒரு விதியும் , ஒன்றுக்கு மேற்ப்பட்டவையுடன் காணும் பொழுது வேறு விதியுடனும் இருக்கும் . இவ்விதிகளையும் , candle stick -க்கின் வகைகளையும் வரும் பதிவில் காண்போம் . 

கருப்பு மற்றும் வெள்ளை candle stick chart 

ஒரு நாளின் தொடக்க விலையை விட முடிவு விலை அதிகமாயின் , அந்நாளின் candle stick வெள்ளை நிறம் கொண்டிருக்கும் . அதேபோல் , தொடக்க விலையை விட முடிவு விலை குறைவாயின் கருப்பு நிறம் கொண்டிருக்கும் . ஒரு நாளின் விலையின் போக்கு ஏறுமுகமா ? அல்லது இறங்கு முகமா ? என எளிதில் கண்டறிய முடியும் . 




No comments:

Post a Comment