Fidelis Capital Markets

Saturday, December 11, 2010

MARUBOZU candlestick

MARUBOZU candlestick pattern என்பது , நாளின் உயர்ந்தபட்ச விலை மற்றும் குறைந்த பட்ச விலைகளையே, நாளின் தொடக்க விலை அல்லது முடிவு விலையாகவோ இருந்து , ஒரு சதுர அல்லது செவ்வக வடிவை கொண்டிருக்கும் . இந்த marubozu அமைப்பிற்கு கீழ் மற்றும் மேல் நேர்கோடுகள் இருக்காது . 



வெள்ளை MARUBOZU 

வெள்ளை MARUBOZU அமைப்பானது , நாளின் தொடக்க விலையும் ,குறைந்த பட்ச விலையும் ஒன்றாக இருந்தும் , நாளின் முடிவு விலையும் ,உயர்ந்த பட்ச விலையும் ஒன்றாக இருந்து இந்த அமைப்பை தோற்றுவிக்கும் . இந்த அமைப்பு தோன்றும் தின வணிக நாள் முழுமையும் , சந்தை காளையின் கைகளில் இருக்கும் . அதாவது , பங்குகளை வாங்குபவர்களே நாள் முழுமையும் ஆதிக்கம் செலுத்துவார்கள் . 

கருப்பு MARUBOZU 

கருப்பு MARUBOZU என்பது நாளின் தொடக்க விலையும் , உயர்ந்த பட்ச விலையும் ஒன்றாக இருந்து , முடிவு விலையும் , குறைந்த பட்ச விலையும் ஒன்றாக இருந்து இந்த அமைப்பை தோற்றுவிக்கும் . இந்த அமைப்பு தோன்றும் தின வணிக நாள் முழுமையும் ,சந்தை கரடிகளின் செல்வாக்கில் இருக்கும் . நாள் முழுமையும் , பங்குகளை விற்பதில் முதளிட்டளர்கள் ஆர்வம் காட்டுவார்கள். 

No comments:

Post a Comment