Fidelis Capital Markets

Saturday, December 4, 2010

Dragon fly Doji




இந்த அமைப்பு doji வகையை சார்ந்தது . dragon fly doji என்பது , நாளின் தொடக்க விலை ,உயர்ந்த பட்ச விலை மற்றும் முடிவு விலை சமாகவோ அல்லது சற்று வேறுபட்டு இருந்து , நாளின் குறைந்தபட்ச விலை மட்டும் வேறுபட்டு இந்த அமைப்புகள் உருவாகும் . 


இவ்வகை அமைப்புகளுக்கு real body இருக்காது , அவ்வாறு இருப்பினும் மிக மிக சிறிய அளவில் இருக்கும் .இந்த அமைப்பு ஆங்கில எழுத்து "T" போன்று தோற்றம் அளிக்கும் . 

dragon fly doji அமைப்பை முந்தய நாளின் candle stick அமைப்புடன் ஒப்பிட்டு பார்த்து ,நம் யூகத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ளலாம் . 

dragon fly doji அமைப்பின் , கீழ் உள்ள நேர்கோடனது , வணிகதினத்தின் முற்பாதியில் சந்தை சரிவை நோக்கி சென்றாலும் , பிற்பாதியில் , வாங்கும் திறன் அதிகரித்து , சந்தை காளையின் கட்டுப்பாட்டுகுள் வந்து தொடக்க விலையிலே , நாளின் முடிவு விலையும் அமைந்து விடும் . 




 இது ஒரு " திருப்பு முனை" அமைப்பு , அதாவது சந்தை ஏறுமுகத்தில் இருக்கும் பொழுது (முந்தய நாளின் அமைப்புடன் ஒப்பிட்டு ) இறங்கு முகத்திற்கு தயாராக உள்ளதையும் , இறங்கு முகத்தில் உள்ளபோது , ஏறுமுகத்திற்கு தயாராக உள்ளதை எடுத்துக்கட்டும் அமைப்பாகும் . 

ஏறுமுகத்தில் இந்த அமைப்பு தோன்றினால் , நாளின் குறைந்த பட்ச விலையை கவனத்தில் கொள்க ! , மறுநாள் , இந்த குறைந்த பட்ச விலை தாண்டி , விலை கிழே சென்றால் , சந்தை சரிவை நோக்கி பயணிக்கிறது எனலாம் . 

இறங்கு முகத்தில் இந்த அமைப்பு தோன்றினால் , நாளின் உயர்த்த பட்ச விலையை கவனத்தில் கொள்க ! , மறுநாள் , இந்த உயர்த்த பட்ச விலை தாண்டி , விலை மேலே சென்றால் , சந்தை மேல் நோக்கி பயணிக்கிறது எனலாம் . 
-- 

No comments:

Post a Comment