Fidelis Capital Markets

Sunday, December 26, 2010

Long Legged Doji

Long Legged Doji யானது  Doji அமைப்பை சார்ந்தது , இதுவும் spinning top அமைப்பை  போன்று , சந்தை நிலையற்ற தன்மையில் உள்ளதை குறிக்கும் . இதனால் இந்த அமைப்பு தோன்றும் பொழுது எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதே நலம் . 




Long Legged Doji அமைப்பானது, real body -யின் மேல் மற்றும் கீழ் நேர் கோடுகள் பெரியதாகவும் , real body இல்லாமலோ அல்லது மிக சிறிய அளவிலோ இருக்கும் . spinning top அமைப்பும்  Long Legged Doji அமைப்பும் பார்பதற்கு ஒன்று போல தோன்றினாலும் , இரண்டும் சற்று வேறுபாடுகள் உள்ளன.Spinning top அமைப்பிற்கு மேல் மற்றும் கீழ் நேர் கோடுகள் சமாக இருக்காது ஆனால் Long Legged Doji -யில் நேர் கோட்டின் அளவுகள் சமமாக இருக்கும் .  spinning top அமைப்பில் real body இருக்கும் , Long Legged Doji -யில் real body இருக்காது , இருந்தாலும் மிக மிக சிறிய அளவிலே இருக்கும் .


 இந்த மாதிரி நிலையற்ற அமைப்புகள் தோன்றும் பொழுது , தின வணிகத்தின் அடுத்த நாளில் , பங்கின் விலை இன்றைய உயர்ந்த விலைக்கு மேல் செல்லும் பொழுதோ அல்லது இன்றைய குறைந்த பட்ச விலைக்கு கீழ் செல்லும் பொழுதோ நாம் முடிவுகளை எடுக்கலாம் , நாம் முடிவுகளை உறுதி செய்து கொள்வதற்கு support and resistance விலைகள் மற்றும் பிற வழிமுறைகளை கையாள்வது நலம் பெயர்க்கும் . 

Sunday, December 12, 2010

Spinning Top Candle Stick

Spinning top candle stick என்பது , real body சற்று சிறியதாகவும் , கீழ் மற்றும் மேல் நேர்கோடுகள் சற்று அதிகமானதாகவும் இருந்து இந்த அமைப்பை தோற்றுவிக்கும் .



அதாவது தின வணிகத்தில் சந்தை , உயர்ந்ததும் ,தாழ்ந்து இருந்தாலும் முடிவு விலை ,தொடக்க விலை மிக அருகிலேயே இருக்கும் . தின வணிகத்தில் சந்தை காளை மற்றும் கரடிகளின் ஆதிக்கம் மாறி மாறி , நிலையட்ற தன்மையில் இருக்கும் .


பொதுவாக இந்த அமைப்பு தோன்றும் பொழுது எந்த வித முடிவும் ( வாங்கவோ அல்லது விற்கவோ ) எடுக்காமல் இருப்பதே சிறப்பானதாக இருக்கும் . 




சந்தை ஏறு முகத்தில் இருக்கும் பொழுது, spinning top அமைப்பு தோன்றினால் , காளையின் வலிமை குறைவதாகவும் , கரடிகளின் கைகள் ஒங்குவாதாகவும் எடுத்து கொள்ளலாம் . சந்தை இறங்கு முகத்தில் இருக்கும் பொழுது, spinning top அமைப்பு தோன்றினால் , கரடிகளின்  வலிமை குறைவதாகவும் ,காளையின் கைகள் ஒங்குவாதாகவும் எடுத்து கொள்ளலாம் . 

Saturday, December 11, 2010

MARUBOZU candlestick

MARUBOZU candlestick pattern என்பது , நாளின் உயர்ந்தபட்ச விலை மற்றும் குறைந்த பட்ச விலைகளையே, நாளின் தொடக்க விலை அல்லது முடிவு விலையாகவோ இருந்து , ஒரு சதுர அல்லது செவ்வக வடிவை கொண்டிருக்கும் . இந்த marubozu அமைப்பிற்கு கீழ் மற்றும் மேல் நேர்கோடுகள் இருக்காது . 



வெள்ளை MARUBOZU 

வெள்ளை MARUBOZU அமைப்பானது , நாளின் தொடக்க விலையும் ,குறைந்த பட்ச விலையும் ஒன்றாக இருந்தும் , நாளின் முடிவு விலையும் ,உயர்ந்த பட்ச விலையும் ஒன்றாக இருந்து இந்த அமைப்பை தோற்றுவிக்கும் . இந்த அமைப்பு தோன்றும் தின வணிக நாள் முழுமையும் , சந்தை காளையின் கைகளில் இருக்கும் . அதாவது , பங்குகளை வாங்குபவர்களே நாள் முழுமையும் ஆதிக்கம் செலுத்துவார்கள் . 

கருப்பு MARUBOZU 

கருப்பு MARUBOZU என்பது நாளின் தொடக்க விலையும் , உயர்ந்த பட்ச விலையும் ஒன்றாக இருந்து , முடிவு விலையும் , குறைந்த பட்ச விலையும் ஒன்றாக இருந்து இந்த அமைப்பை தோற்றுவிக்கும் . இந்த அமைப்பு தோன்றும் தின வணிக நாள் முழுமையும் ,சந்தை கரடிகளின் செல்வாக்கில் இருக்கும் . நாள் முழுமையும் , பங்குகளை விற்பதில் முதளிட்டளர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.