Fidelis Capital Markets

Friday, August 27, 2010

பங்கு சந்தை

பங்கு சந்தை :-

                       பங்கு சந்தை என்பது நிறுவன பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான களம் ஆகும் . அதாவது ஒரு நிறுவன பங்குகளை ஒரு முதளிட்டலரிடமிருந்து ,மற்றொருவருக்கு வாங்குவதற்கும் , விற்பதற்குமான இடமே பங்கு சந்தை ஆகும் . 

பங்கு சந்தை வகைகள் :- 

                       பங்கு சந்தையை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் . அவைகள் முறையே 

                          1.Primary Market        (ப்ரைமரி மார்க்கெட் )
                          2.Secondary Market (செகண்டரி மார்க்கெட் )

Primary Market        (ப்ரைமரி மார்க்கெட் ) :- 

                 ப்ரைமரி மார்க்கெட் என்பது , ஒரு நிறுவனம் அதன் வளர்ச்சி பணிகளுக்கான மூலதனத்தை , பொதுமக்களிடம் இருந்து பெறும்பொருட்டு , முறையே அரசு ,செபி மற்றும் அதன் தொழில் சார்ந்த அமைப்புகளிடமிருந்து முறையான அனுமதி பெற்று , மக்களை நாடி மூலதனத்தை திரட்டும் இடமே ப்ரைமரி மார்க்கெட் எனப்படும். 

சுருங்க சொல்வதாயின் நிறுவனம் நேரடியாக மக்களை நாடி மூலதனத்தை திரட்டும் இடமே ப்ரைமரி மார்க்கெட் எனப்படும்.  இவ்வாறு நிறுவனம் பொதுமக்களை நாடும் முறைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் . அவை முறையே 

1. IPO   - Initial public offering (இன்சியல் பப்ளிக் அப்-பரிங் )

2. FPO - follow on  public offering (பாலோ ஆன் பப்ளிக் அப்-பரிங் )

IPO 

   IPO என்பது "முதன் முறையாக " ஒரு நிறுவனம் பொதுமக்களை அதன் மூலதனத்திற்காக நாடுவதையே IPO என்கிறோம் . இதுவரை அந்நிறுவனம் தன்சுய மூதலீட்டில் இயங்கிகொண்டிருந்திருக்கும் , அதன் வளர்சிக்காகவும் , விரிவாக்க பணிக்காகவவும் நிதியை திரட்ட , நிறுவனம் பொது மக்களை நடுவதை IPO என்கிறோம் .

FPO 
FPO  என்பது , ஏற்கனவே ஒரு நிறுவனம் பொதுமக்களை நாடி மூலதனத்தை திரட்டி , அந்த நிதி கொண்டு தொழில் செய்துகொண்டிருக்கும் , மேலும் அதன் வளர்சிக்காக ,அந்நிறுவனம் மறுபடியும் மக்களை நாடி மூலதனத்தை திரட்டுவது  follow on  public offering  எனப்படும் . 

Thursday, August 26, 2010

பங்கு என்றால் என்ன ?

ஒரு financial planner -ரை வைத்து , உங்களின் வாழ்க்கை இலட்சியத்தை சென்றடைய முறையான வழிகள் , மேலும் பங்குச்சந்தை ஒதுக்கீடு , உங்களின் risk எடுக்கும் திறன் ஆகியவற்றை கணித்தாயிற்று ,இனி  பங்குச்சந்தை பற்றி ஒரு பார்வை பார்த்துவிடலாம் .

பங்கு என்றால் என்ன ?


சுருங்க கூறுவதாயின் " ஒரு நிறுவனத்தின் மூலதனத்தில் ,ஒரு பங்கையே , நாம் பங்கு என்கிறோம் . 

உதரணமாக :- 

                           ABC என்கிற நிறுவனம் , அதன் வளர்ச்சி பணிகளுக்கான மூலதனத்தை , பொதுமக்களிடம் இருந்து பெறும்பொருட்டு , அதன் மொத்த மூலதனத்தை சிறு சிறு கூறுகளாக பிரித்து வெளியிடும் . அவ்வாறு சிறு சிறு கூறுகளாக பிரித்த முதலீட்டில் , ஒரு கூறுரை , பங்கு என்னலாம் .

ABC நிறுவனத்திற்கு தேவைப்படும் முலதனதொகை :- ரூ. 1,00,000 என்க

இதனை 1000 கூறுகளாக பிரிப்பதால் கொண்டால் ,
ஒரு கூறின் அல்லது பங்கின் விலை ------------------------------:- 1,00,000/1000
                                                                                                  :- ரூ.100/-

Wednesday, August 25, 2010

2. ஒதுக்கீடு

                          இந்த பகுதியில் , எவ்வளவு தொகையை பங்கு சந்தையில் முதலிடு செய்யபோகிறிர்கள் (நீங்கள் தயாரித்த financial plan-படி அல்லது உங்களின் financial planner கொடுத்த அறிவுரையின் படி ) சந்தையில் உள்ள வணிகமுறைகளில் எதனை தேர்வு செய்ய போகிறிர்கள் , அதன் விகிதாசாரம் எவ்வளவு? என்பதை பற்றி பார்க்கலாம் .

உதரணமாக - மொத்த சேமிப்பில் 25% பங்கு முதலிடு என்று வைத்துக்கொண்டால் , அந்த 25சதவிகிதத்தில், எத்தனை சதவிகிதம் தினவணிகம் , நீண்ட மற்றும் குறுகிய கால முதலிடு என்பதை , முதலிடு மேற்கொள்வதற்கு முன் , நமக்கு தேவையான , சரியான விகிதத்தில் ஒதுக்கீடு செய்து வைத்திருக்க வேண்டும் . எப்பொழுதும் காலம நமக்கு சாதகமாகவே இருக்காது , சில சமயம் மாறும் , அப்படிப்பட்ட நேரங்களில் , கொண்டு வந்த 25 சதவிதத்தையும் இழந்து , அந்தோ பரிதாப நிலையில் , மட்டிக்கொள்ளகூடாது. அதற்குத்தான் இந்த மாதிரி முதலீட்டை பிரித்து முதலிட்டை மேற்கொள்வதன் மூலம் , Risk -கை நாம் கூடுமானவரை குறைத்துகொள்ளலாம் . 

உதரணமாக :- 

மொத்த சேமிப்பு -------------  = ரூ . 10,00,000/- என்க, 

பங்கு சந்தை - ஒதுக்கீடு --= 25% =>  10,00,000*25/100

                                            = ரூ .2,50,000 /-

மேலும் இந்த ஒதுக்கீட்டை கிழ்க்கண்டவாறு பிரிக்கலாம் .

 பங்குச்சந்தை முதலீடு 
               |
               |
               ->     நீண்டகால முதலீடு----- ->40%  (Rs,1,00,000)
               |
               ->     குறுகிய கால முதலீடு---->30%  (Rs.75,000)
               |  
               ->     தினவணிகம் ---------------> 30%  (Rs.75,000)

மேற்கூறியவை உதாரணம் மட்டுமே , காலம் , நேரம் , உங்களின் வயது வருமானம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவை பொறுத்து மாறுபடும்.