பங்கு சந்தையில் நீங்கள் நேரடியாக முதலீடு செய்ய முடியாது , அதற்கென SEBI அனுமதி பெற்ற ஒரு தரகு நிறுவனம் முலமே மட்டும் பங்குசந்தையில் பங்கேற்கமுடியும் . பங்குசந்தையில் இருவித கணக்குகள் உள்ளன , இந்த இரண்டு கணக்குகளையும் நீங்கள் துவங்க வேண்டும் .
1. Demat A/c
2.Trading A/c
- Trading A/c (ட்ரேடிங் கணக்கு )
Trading A/c என்பது சந்தையில் பங்குகளை வாங்கும் , விற்பதற்கும் பயன்படுத்தும் கணக்கு . நடைமுறையில் சொல்வதாயின் , நம்ம அண்ணாச்சி கடை மாதிரி ( ஒருவரிடமிருந்து வாங்கி ,இன்னொருவருக்கு விற்பது ) இங்கே வாங்கவும் , விற்கவுமே முடியும் , வாங்கியதை சேமிக்க முடியாது.
- Demat A/c
தரமான பொருள் , குறைவான விலைக்கு வந்தால் ,அதை வாங்கி சேமித்து , நல்ல விலை வரும் பொழுது விற்றது லாபம் பார்க்கணுமே ,அப்போ வாங்கியதை சேமிக்க ஒரு குடோன் வேணுமே , அந்த குடன் மாதிரி ,பங்குகளை நல்ல விலைக்கு வாங்கியதை சேமிக்கவே இந்த டிமேட் கணக்கு . Trading A/c
பயன்படுத்தி பங்குகளை வாங்குகின்றோம் ,அதை டிமேட் கணக்கில் சேமிக்கின்றோம் மறுபடியும் Trading A/c பயன்படுத்தி விற்கின்றோம் . Demat a/c என்பது dematerialized பத்திர வடிவில் இருக்கும் பங்குகின் மாதிரி
- பொதுவாக Demat A/c -இல் நான்கு வித கட்டணங்கள் வசூலிக்கபடுகின்றன ,
- 1 Account-opening fee
- 2 Annual maintenance fee
- 3 Custodian fee
- 4 Transaction fee
- கணக்கை துவங்க தேவையானவை
1. உங்களது புகைப்படம்
2.PAN CARD சான்று
3.முகவரி சான்று
4.வங்கி கணக்கு சான்று
5.ரத்து செய்யப்பட்ட காசோலை
- கணக்கை துவங்கும் முன்
1.நல்ல தரகு நிறுவனமா ?
2.SEBI -REG NO சரிபார்த்தல்
3.குறைவான தரகுதான் வசுளிக்கின்றனவா ?
4.தரமான சேவை கிடைக்குமா ?
5. தரமான பரிந்துரைகள் கிடைக்குமா ?
போன்றவற்றை சரிபர்துக்கொளுங்கள் , இலவசமாக கணக்கை துவங்க நிறைய நிறுவனங்கள் உள்ளன , அனால் தக்க சமயத்தில் சரியான பரிந்துரையும் ,சேவையும் அளிக்குமா? என்பதை நீங்கள்தான் சரிபார்க்கவேனும்.
- துவங்கிய பின்
1.உங்களின் பெயர் , முகவரி , வங்கி விபரம் , வாரிசு விபரம் போன்ற விபரங்களை சரிபர்த்துகொள்ளுங்கள்.
2.வணிகம் முடிந்தவுடன் தரப்படும் contract note -யை சரிபர்த்துகொள்ளுங்கள் .
3.முறையாக நீங்கள் வாங்கிய பங்குகள் ,தங்களின் Demat A/c -க்கு வந்து சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .(இதற்க்கு இரண்டு வேலை நாட்கள் ஆகும் , அதாவது T+2 என்பார்கள் )
4. காலாண்டு , அரையாண்டு முடிவில் அல்லது தேவைப்படும் பொழுது தங்களின் a/c statement -யை சரிபார்த்துகொள்ளுங்கள்.




