Fidelis Capital Markets
Showing posts with label technical analysis. Show all posts
Showing posts with label technical analysis. Show all posts

Wednesday, November 3, 2010

Inverted Hammer











Hammer candle stick pattern -இன் தலைகீழ் வடிவமே  இந்த inverted hammer candle stick . சந்தை  இறங்கு  முகமாக இருக்கும் பொழுது , இவ்வித அமைப்பு தோன்றினால் , சரிவு நிலை முடிந்து , சந்தை ஏறுமுகமாக அல்லது சமநிலையிலையோ பயணிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் அமைப்பே இந்த Inverted Hammer அமைப்பாகும் . 


Inverted Hammer என்பது , நாளின் குறைந்தபட்ச விலையும் ,தொடக்க விலையும் ஒன்றாக இருந்து , நாளின் முடிவு விலை , உயர்ந்த பட்ச விலை விட குறைவாகவும் , தொடக்க விலையைவிட அதிகமானதாகவும் இருக்கும் , இந்த அமைப்பானது குறுகிய கால பார்வைக்கு சிறந்ததாக இருக்கும் . 



முந்தய நாளின் candle stick -இன் real body -க்கும் ,இந்நாளின் candle stick -இன் real body -க்கும் உள்ள இடைவெளி ,சந்தையின் போக்கில் மாற்றம் உண்டவாதர்க்கான நம்பக தன்மையை குறிக்கும் , இடைவெளி அதிகமானால் நம்பா தன்மையும் அதிகரிக்கும் . இதேபோல் இந்நாளின்    
real body -க்கு மேலே உள்ள நேர்கோட்டின் நீளம் அதிகமானால் நம்பா தன்மை அதிகரிக்கும் . 

Wednesday, October 27, 2010

DOJI candle stick

DOJI 

தொடக்க விலை மற்றும் முடிவு விலை சமமான நிலையிலையோ , அல்லது சிறிது வேறுபட்டும் , உச்ச விலையும் , குறைந்த பட்ச விலையும் வேறுப்படும் இந்த டோஜி அமைப்புகள் உருவாகின்றன . இந்த டோஜி அமைப்புகளை பார்ப்பதற்கு ஒரு சிலுவை தோற்ற்றம் கொண்டதாக இருக்கும் . 



தின வணிகத்தில் , பங்கின் விலை மேலும் கீழும் சென்று நாம்மலை எல்லாம் பயமுறுத்தி , ஒரு வழியாக அன்றைய நாளின் முடிவில் , நாளின் தொடக்க விலையிலேயே முடிவும் இருக்கும் . 

பாண்டியன் கொடிபோன்றது இந்த டோஜி அமைப்பு , மதுரை நகர்க்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது , கோவலனுக்கும் , கண்ணகிக்கும் , வார என மறித்து கை கட்டியது போல , இந்த டோஜி அமைப்புகள் , எந்த வித முடிவும் எடுக்க வேண்டாம் என எச்சரிக்கும் . 

நாம் முன்னரே பார்த்த படி , இவைகளை தனித்து பார்த்தால் ஒரு நிலையும், ஒன்றுக்கு மேர்ப்பட்டவையுடன் சேர்த்து பார்த்தால் , மாறுப்பட்ட நிலையும் காட்டும் . 

டோஜி அமைப்பில் நிறைய வகைகள் உள்ளன , அவை முறையே 


  • Dragan fly doji
  • Gravestone doji
  • White candle doji
  • Black candle doji
  • Morning doji
  • Evening doji
  • Double doji
  • Four price doji
  • Tri-star doji
  • Llong legged doji






Thursday, October 21, 2010

OHLC BAR CHART



O - OPEN 
H - HIGH 
L - LOW
C - CLOSE

இந்த வகை வரைபடத்தில் , குறிப்பிட்ட நாளின் அனைத்து விலைகளை நம்மால் அறியமுடிகிறது ( தொடக்க , இறுதி , குறைந்த & அதிகபட்ச விலைகளை ) மேலும் சந்தையின் போக்கை தீர்மானிப்பதற்கும் , volatility -யை எளிதில் அறிந்து கொள்வதற்கும் இவ்வகை வரைபடங்கள் உதவுகின்றன. முன்னர் பார்த்த line chart - இல் இவைகளை அறியமுடியாது . 


  • இவ்வகை வரைபடத்தில் உள்ள நேர் கோட்டின் கீழ்பகுதி , நாளின் குறைந்தபட்ச விலையையும் ,
  • வரைபடத்தில் உள்ள நேர் கோட்டின் மேல்பகுதி அதிகபட்ச விலையையும் குறிக்கும் . 
  • மேலும் இடதுபுறம் உள்ள பக்கவாட்டு கோடு , அந்நாளின் தொடக்க விலையையும் , 
  • வலது புறம் உள்ள பக்கவாட்டு கோடு நாளின் முடிவு விலையையும் குறிக்கும் .
  •  நேர் கோட்டின் நீளமானது , அந்நாளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிக்கும்  அதாவது volatility குறிக்கும் . 



  • வரைபடத்தில் வலது புறம் உள்ள பக்கவாட்டு கோடு ( தொடக்க விலை ) கீழ் இருந்து , இடது புறம் உள்ள பக்கவாட்டு கோடு மேல் இருந்ததால் , அந்நாள் ஏறுமுக நாளாகவும் , 
  • வலது புறம் உள்ள பக்கவாட்டு கோடு ( தொடக்க விலை )  மேல்  இருந்து , இடது புறம் உள்ள பக்கவாட்டு கோடு கீழ் இருந்ததால் , அந்நாள் இறங்கு முக நாளாகும் . 

இவ்வரைபடத்திற்கு நிறம் கொடுப்பதாயின் , முந்தைய நாளின் முடிவு விலையை விட , இந்நாளின் முடிவு விலை அதிகமாக இருப்பின் பச்சை நிறமாகவும் ( அதாவது ஏறுமுக நாளாகவும் ) , முந்தைய நாளின் முடிவு விலையை விட , இந்நாளின் முடிவு விலை குறைவாக  இருப்பின் சிவப்பு நிறமாகவும் ( அதாவது இறங்கு முகமக நாளாகவும் ) , காட்டும் .  



Wednesday, October 20, 2010

Line chart


பொதுவாக , குறிப்பிட்ட நாட்களின் முடிவில் இருக்கும் பங்கின் முடிவு விலையை வைத்தே இந்த line chart - யை வரைவார்கள் . இதனால் அந்த குறிப்பிட்ட பங்கின் தொடக்க விலை , அந்நாளின் உயர்ந்த பட்ச மற்றும் குறைந்தபட்ச விலையை நமால் அறிந்துகொள்ள முடிவதில்லை . இந்த முறையே , technical analysis -இன் ஆரம்பா காலத்தில் உகந்ததது . இம்முறை , நாம் ஏற்கனவே பல்வேறு வகையில் பயன்படுத்தி இருப்போம் அதனால் இமுறை எளிது . 
















இந்த முறையில் மிக முக்கியமான நன்மை என்னவென்றால் , வரைபட அமைப்பு எனப்படும் chart pattern - யை மற்ற முறைகளை விட இதில் எளிதில் கண்டுகொள்ள முடியும் . ஆதாவது , குறிப்பிட்ட நட்டகளின் விலையை வைத்து வரைபடம் வரையும் பொழுது , அவைகளின் இணைப்பில் ஒருவித அமைப்புகள் உருவாகும் (like head & shoulder , double top ) இவ்வமைப்புகள்  எதிர்கால வளர்ச்சியை பற்றி ஆராய மிக உதவியாக இருக்கும் , இவ்வமைப்புகள் தனிதனி விதிமுறைகள் கொண்டிருக்கும் , இவ்வமைப்புகள் பற்றி பின்னர் பார்ப்போம் 



Monday, October 11, 2010

technical analysis

technical analysis என்பது ஓர் நிறுவன பங்கின் விலையில் ஏற்படும் மாற்றங்களை , வரைபடத்தின் உதவியோடு மேலும் வரை படத்தில் சில காரணிகளை பயன்படுத்தி , அந்த பங்கின் விலையில் வருங்கலத்தில் ஏற்படும் மாற்றங்களை கணிப்பதே இந்த technical analysis ஆகும் 

வரைப்படத்தில் தோன்றும் அமைப்பின் மூலம் விலையில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை கணிக்கலாம் மேலும் pivot point, RSI, MOVING AVG போன்ற காரணிகளை கொண்டு , நாம் யூகிக்கும் நிலையின் நம்பகத்தன்மையை சரிபார்த்து கொள்ளலாம் . 


வரைப்படம் :-

technical analysis -இன் அடிப்படையான வரைப்படம் மற்றும் அதன் வகைகள் , வகையின் தனித்தன்மை போன்றவற்றை பார்ப்போம் . பொதுவாக வரைப்படத்தில் பங்கின் விலையும் , அதன் volume இருக்கும் , மற்ற காரணிகள் அனைத்தும் ,விலையின் போக்கை அறிவதற்கும் ,நாம் யூகித்த விலை சரித்தான என உறுதிபடுத்துவதர்க்கும் உண்டானவைகளே .