Long Legged Doji யானது Doji அமைப்பை சார்ந்தது , இதுவும் spinning top அமைப்பை போன்று , சந்தை நிலையற்ற தன்மையில் உள்ளதை குறிக்கும் . இதனால் இந்த அமைப்பு தோன்றும் பொழுது எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதே நலம் .
Long Legged Doji அமைப்பானது, real body -யின் மேல் மற்றும் கீழ் நேர் கோடுகள் பெரியதாகவும் , real body இல்லாமலோ அல்லது மிக சிறிய அளவிலோ இருக்கும் . spinning top அமைப்பும் Long Legged Doji அமைப்பும் பார்பதற்கு ஒன்று போல தோன்றினாலும் , இரண்டும் சற்று வேறுபாடுகள் உள்ளன.Spinning top அமைப்பிற்கு மேல் மற்றும் கீழ் நேர் கோடுகள் சமாக இருக்காது ஆனால் Long Legged Doji -யில் நேர் கோட்டின் அளவுகள் சமமாக இருக்கும் . spinning top அமைப்பில் real body இருக்கும் , Long Legged Doji -யில் real body இருக்காது , இருந்தாலும் மிக மிக சிறிய அளவிலே இருக்கும் .
இந்த மாதிரி நிலையற்ற அமைப்புகள் தோன்றும் பொழுது , தின வணிகத்தின் அடுத்த நாளில் , பங்கின் விலை இன்றைய உயர்ந்த விலைக்கு மேல் செல்லும் பொழுதோ அல்லது இன்றைய குறைந்த பட்ச விலைக்கு கீழ் செல்லும் பொழுதோ நாம் முடிவுகளை எடுக்கலாம் , நாம் முடிவுகளை உறுதி செய்து கொள்வதற்கு support and resistance விலைகள் மற்றும் பிற வழிமுறைகளை கையாள்வது நலம் பெயர்க்கும் .