Fidelis Capital Markets

Tuesday, August 31, 2010

பங்கு சந்தையில் ஈடுபடுவதற்கான முறைகள்



பங்குசந்தையில் ஈடுபடுவதை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் . அவைகள் முறையே 





1 . முதலீட்டு முறை --
             
                   சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளில் , சில குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது நாம் நினைத்த லாபம் வரும்வரை முதலீடு செய்வது எனலாம் . 
உதரணமாக :- 
                           நாம் அனைவருக்கும் தெரிந்த வகையில் சொல்வதாயின் , நிலமுதலீட்டை எடுத்துகொள்ளலாம் , ஒரு நிலம் வாங்கினால் , பெரும்பாலும் , அதன் விற்பனையை தீர்மானிப்பது , நமது பணதேவைகளோ ,அல்லது நல்ல லாபகரமான விலையாகத்தான்  இருக்கும் . அதுபோலவே நீண்ட கால , குறிகிய கால முதலீட்டை கூறலாம் . 

            நல்ல நிறுவன பங்குகளின் மீது , நீண்ட கால மற்றும் குறுகிய கால முதலீடு செய்வது என்பது சிறந்ததாக இன்றுவரை உள்ளது , மேலும் மற்ற வகைகளை விட இந்த முறை பாதுகாப்பாக இருக்கிறது . 

செய்யகூடதவை 


                               பாதுகப்பனது ,நீண்ட கால முதலிடு என்று சொல்லி , ஏதோ ஒரு நிறுவன பங்குகளை வாங்கிவிட்டு , அதை கவனிக்காமல் , 3 -5 வருடம் கழித்து பார்த்தல் அவைகள் காணமல் கூட போகும் ,போகிறபோக்கில் , விழா எடுத்து ,100 மரகன்றுகளை நட்டுவிட்டு , புகைப்படம் எடுப்பதில்லை இந்த முதலீடு என்பது , இதெல்லாம் விளம்பர பிரியர்களின் வழி , நமக்கு அந்த வழி வேண்டாம் , முறையாக , மண்ணின் தன்மை , சிதோசநிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு , அதற்கேற்ப மரக்கன்றை பதியவிட்டு , தேவையானபொழுது , நீர்ருற்றி , உரமேற்றி அரவணைத்தால் மட்டுமே , வருங்கால கனி ருசிக்கும் , இல்லைஎன்றால் , மரம் வளருமா ? , வளர்ந்தாலும் கனி கிடைக்குமா ? என குழப்பமான கேள்விகள் மட்டும் கிடைக்கும் , கனி கிடைத்ததால் உங்கள் அதிர்ஷ்டம் .

யூக வணிகம் : -

யூக வணிகம் என்பது ,அதன் பெயரில் உள்ளதைப்போல் , யூகத்தின் அடிப்படையில் ஆனது , பங்குகளின் விலையில் ஏற்படும் ஏற்ற ,இறக்கங்களை பயன்படுத்தி லாபம் பார்ப்பது . பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றங்களை முன்னரே யூகித்து வணிகத்தில் ஈடுபடுவது யூகவநிகமாகும் .


இதில் தினவணிகம் என்பது , ஒரு குறிப்பிட்ட நாளில் , சந்தை முடியும் முன்னரே , பங்குகளை வாங்கி இருந்தால் அதை விற்றும், விற்றிருந்தால் வாங்கியும், கணக்கை நேர்செய்து , லாபா நட்டகளை பார்ப்பது தினவணிகம் ஆகும் . இவ்வகை வணிக முறைகளில் , நடைமுறையில் , தரகு நிறுவனங்கள் நாம் முதலீடு செய்த தொகைக்கு 3-5 மடங்கு வரை வணிகம் செய்ய அனுமதிக்கலாம் , அனால் ஒரே ஒரு கண்டிஷன் , வணிகம் அந்த குறிப்பிட்ட நாளுக்குள் முடித்தாக வேண்டும் . இல்லை என்றால் வாங்கி இருக்கும் பங்குகளின் முழு மதிப்பிற்கு காசோலை கொடுக்க வேண்டும் . அவ்வாறு முழு தொகை கொடுத்தால் , அப்பங்குகள் உங்களின் டிமேட் கணக்கிற்கு சென்றடையும் , அவைகள் முதலீடுகளாக மாறும் . 

Monday, August 30, 2010

index என்றால் என்ன ?

index என்றால் என்ன ? 




இன்றைய தொலைகாட்சி மற்றும் செய்திதாள்களில் சென்செக்ஸ் & நிப்படி இவ்வளவு புள்ளிகள் ஏறின என்றும் இறங்கின என்றும் அறிவித்துகொண்டே இருக்கின்றன . நம்மில் பலருக்கு , சந்தை பற்றி அறிமுகம் இல்லாதவருக்கும் , சென்செக்ஸ் & நிப்படி என்றால் என்ன என்பதே தெரியாது , இதனைத்தான் இன்டெக்ஸ் என்கிறோம் . 

     இன்டெக்ஸ் என்பது ,ஓர் குறிப்பிட்ட நாளில் , குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்படும் , ஏற்ற , இறக்கங்களின் கூட்டு சாரசரியே இன்டெக்ஸ் என்பதாகும் . 

 கணக்கிடபடும் முறை :- 

-> இன்டெக்ஸ் - யை கணக்கிட , base year எனப்படும் அடிப்படை ஆண்டை தேர்வு செய்வர் ,

-> பின்பு சந்தையில் வணிகத்தில் இருக்கும் , மொத்த பங்குகளில் ,சில விதிமுறைகளை பின்பற்றி ,குறிப்பிட்ட பங்குகளை தேர்வு செய்வர் , 

->இந்த குறிப்பிட்ட பங்குகளின் , குறிப்பிட்ட நாளில் விலையில் ஏற்படும் ஏற்ற ,இறக்கங்களின் கூட்டு சாரசரியே அந்நாளில் அதிகரித்த அல்லது குறைந்த புள்ளிகள் ஆகும் . (சென்செக்ஸ் 30 புள்ளிகள் அதிகரித்தது என்கிறார்களே அந்த புள்ளிகள் ) 

->தினம் இவ்வாறு தோன்றும் புள்ளிகளை ,அடிப்படை ஆண்டின் புள்ளிகளோடு இணைத்து இன்டெக்ஸ் - யை கணக்கிடுவர் . 

சென்செக்ஸ் - யில் கணக்கில் கொள்ளப்படும் பங்குகள் 


  • ACC LTD.
  • BHARAT HEAVY ELECTRICALS LTD.
  • BHARTI AIRTEL LTD.
  • CIPLA LTD.
  • DLF Ltd.
  • HDFC BANK LTD
  • HERO HONDA MOTORS LTD
  • HINDALCO INDUSTRIES LTD
  • HINDUSTAN UNILEVER LTD.
  • HOUSING DEVELOPMENT FIN. CORPN. LTD
  • ICICI BANK LTD.
  • INFOSYS TECHNOLOGIES LTD.
  • ITC LTD.
  • JAIPRAKASH ASSOCIATES LIMITED
  • JINDAL STEEL & POWERS LTD.
  • LARSEN & TOUBRO LTD.
  • MAHINDRA & MAHINDRA LTD
  • MARUTI SUZUKI INDIA LIMITED
  • NTPC LTD.
  • ONGC CORPN
  • RELIANCE COMMUNICATIONS LTD.
  • RELIANCE INDUSTRIES LTD.
  • RELIANCE INFRASTRUCTURE LTD
  • STATE BANK OF INDIA
  • STERLITE INDUSTRIES.
  • TATA CONSULTANCY SERVICES LIMITED
  • TATA MOTORS LTD.
  • TATA POWER CO. LTD.
  • TATA STEEL LIMITED.
  • WIPRO LTD.


நிப்படி  - யில் கணக்கில் கொள்ளப்படும் பங்குகள்


  • ABB
  • ACC
  • AMBUJACEM
  • AXISBANK
  • BHARTIARTL
  • BHEL
  • BPCL
  • CAIRN
  • CIPLA
  • DLF
  • GAIL
  • HCLTECH
  • HDFC
  • HDFCBANK
  • HEROHONDA
  • HINDALCO
  • HINDUNILVR
  • ICICIBANK
  • IDEA
  • IDFC
  • INFOSYSTCH
  • ITC
  • JINDALSTEL
  • JPASSOCIAT
  • KOTAKBANK
  • LT
  • M&M
  • MARUTI
  • NTPC
  • ONGC
  • PNB
  • POWERGRID
  • RANBAXY
  • RCOM
  • RELCAPITAL
  • RELIANCE
  • RELINFRA
  • RPOWER
  • SAIL
  • SBIN
  • SIEMENS
  • STER
  • SUNPHARMA
  • SUZLON
  • TATAMOTORS
  • TATAPOWER
  • TATASTEEL
  • TCS
  • UNITECH
  • WIPRO
Index Calculations Formulas

The S&P CNX Nifty index is computed by dividing the float-adjusted market
capitalization of the index component securities as of current date (MCn) by the floatadjusted
market capitalization of the same securities as of initial date (MC1) multiplied by
the index value as of initial date (I1):
In = (I1 *MCn)/MC1
where:
MCn = Float-adjusted index market capitalization as of the current date.
MCn = Σ=
N
i 1
Pi* Qi
where:
Qi = Number of float adjusted shares outstanding of the ith issue as of the
current date.
Pi = Security price of the ith issue as of the current date.
N = Total number of component securities used in the index calculation.

SEBI - securities exchange board of India .

        இந்த அமைப்பு , ஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடுவதற்கு முன்னும் , வெளியிட்ட பின்னும் , அந்நிறுவனத்தை தகுந்த முறையில் கட்டுபடுத்தி நிறுவன மோசடிகள் மற்றும் முறைகேடுகள் அகியவற்றிலிருந்து முதலீடலர்களை பாதுகாக்க இந்த அமைப்பு உதவியாக உள்ளது. 

முதலீட்டளர்களின் பாதுகாப்பு , நலன் , நாட்டின் வளர்ச்சி , அந்நிய முதலீடலர்களை கட்டுப்படுத்துதல் ,உள்நாட்டு நிறுவன முதலீடலர்களை வழிபடுத்துதல் ஆகியவை இந்த அமைப்பின் உன்னத நோக்கம் ஆகும் . மேலும் பங்குசந்தையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களை தனித்தும் , அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கும் துறைசார்ந்த அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டாகவோ , அந்நிறுவனத்தை முறைபடுத்தி முதலீட்டளர்களை பாதுகாக்கிறது . 

மேலும் , பங்குசந்தையில் ஈடுபட்டிருக்கும் தரகு நிறுவங்களை கட்டுபடுத்தி , மோசடிகளை தவிர்க்கவும் , முறையான தணிக்கை மேற்கொண்டு தவறுகளை களைவதும் இதன் முதன்மையான பணியாகும் . இந்த  
அமைப்பு , செபி சட்டம் 1992 கீழ் உருவாக்கப்பட்டு , செயல்பட்டு வருகிறது . முதலீட்டளர்கள் , அவர்களின் குறைகள் , மோசடிகள் குறித்த புகார்களும் செபி -யிடம் பதியலாம் . மொத்தத்தில் முதலீட்டளர்களின் பாதுகாப்பு அரணாக இருந்துவருகிறது . மேலும் தகவல் அறிய http://www.sebi.gov.in/ . 

Saturday, August 28, 2010

இந்தியாவில் உள்ள பங்குசந்தைகள்

இந்தியாவில் உள்ள பங்குசந்தைகள் :- 

                   இந்தியாவில் நிறைய பங்குசந்தைகள் இருந்தாலும் , இன்றைய நிலையில் முதன்மையாக செயல்படுவது BSE- Bombay Stock Exchange  & NSE - National Stock Exchange ஆகும் . 

Bombay Stock Exchange :- 

                     1850 - ஆம் அன்டுகளில் , ஒரு குஜராத்தி மற்றும் ஒரு பார்சி தரகர்கள் இணைந்து , ஒரு மரத்தடியில் , பருத்தி தரகில் ஆரம்பித்தது , 1875 - களில் வணிகம் மற்றும் தரகர்களின் எண்ணிக்கை வளர்ந்து , dalal st - க்கு அலுவலகமாக மாறி, The Native Shares &Stock Brokers Association - என்ற பெயர் பெற்றது. பின்னர் 1956- களில் அரசின் அனுமதி பெற்று, Bombay Stock Exchange என்ற பெயர் கொண்டது . 

                      Bombay Stock Exchange ஆசிய பங்குசந்தைகளில் பழமையானதும் , இந்தியாவில் பங்குவணிகம் தளைத்தோங்க காரணமான விதையாகும். ஆண்டுகள் பல கடந்து மாங்க புகழுடன் , நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கை இன்றுவரை அளித்துகொண்டிருக்கிறது .

National Stock Exchange

                        1992-93  - களில் , இந்தியாவின் முதன்மை நிதி நிறுவனகளால் துவக்கப்பட்டது . பழமை வாய்ந்த BSE - க்கு ஈடுகொடுக்கும் வகையில் , புதிய புதிய தொழில் நுட்பங்ககளை புகுத்தியும் , பல்வேறு விதமான வணிக முறைகளை அறிமுகபடுதியும் , தன் வெற்றி பாதையில் பயணித்து கொண்டிருகிறது . இவைகளை தவிர இந்தியாவில் உள்ள பங்குசந்தைகள் , 

             1.      ASBA
2.      Ahmedabad Stock Exchange
3.      Bangalore Stock Exchange
4.      Bhubaneshwar Stock Exchange
5.      Bombay Stock Exchange
6.      Calcutta Stock Exchange Association Limited
7.      Cochin Stock Exchange
8.      Coimbatore Stock Exchange
9.      Delhi Stock Exchange Association
10.  Guwahati Stock Exchange
11.  Hyderabad Stock Exchange
12.  Inter-connected Stock Exchange of India
13.  Jaipur Stock Exchange
14.  Ludhiana Stock Exchange Association
15.  MCX Stock Exchange
16.  Madhya Pradesh Stock Exchange
17.  Madras Stock Exchange
18.  Magadh Stock Exchange Association
19.  Mangalore Stock Exchange
20.  National Stock Exchange of India
21.  Pune Stock Exchange
22.  Saurashtra Kutch Stock Exchange
23.  UP Stock Exchange
24.  United Stock Exchange of India
25.  Vadodara Stock Exchange
source :- wikipedia.org

செகண்டரி மார்க்கெட்

செகண்டரி மார்க்கெட் :-


                          செகண்டரி மார்க்கெட் என்பது நேரடியாக நிறுவனத்திடம் இல்லாமல் , வேறு ஒரு முதலீட்டளரிடமிருந்து பங்குகளை வாங்குவதற்கும் , விற்பனை செய்வதற்கும் ஆனா இடமே செகண்டரி மார்க்கெட் எனப்படும். 

                            அதாவது ,IPO / FPO என பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள் , முறையாக பங்கு விண்ணபித்த முதலீட்டளருக்கு அந்நிறுவனம் , முறையாக ஒதுக்கீடு செய்த பின்னர் , stock exchange- இல் வர்த்தகத்திற்காக  listing - செய்யப்படும் . அவ்வாறு listing - செய்யப்பட்ட பங்குகள் ஒரு முதலீட்டளரிடமிருந்து இன்னொருவர் வாங்குவதற்கும்,  விற்பனை செய்வதற்கும் ஆனா இடமே செகண்டரி மார்க்கெட் எனப்படும். 


                        
                            IPO & FPO என பொதுமக்களை நாடி வரும் நிறுவனங்கள் முறையே மத்திய மற்றும் மாநில அரசின் கட்டுபாடுகளை பின்பற்றி , அனுமதி பெற்றிர்ருக்கும் . மேலும் SEBI (securities exchange board of india ) மற்றும் ministry of company affairs, நிறுவனம் ஈடுபட்டிருக்கும் தொழில் துறையை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளிடமிருந்து அனுமதி பெறவேண்டும் . உதரணமாக - நிதி நிருவனமாயின் RBI -Reserve bank of India , காப்பிட்டு நிருவனமாயின் IRDA-Insurance Regulatory and Development Authority,தொலைதொடர்பு நிருவனமாயின் TRAI-  The Telecom Regulatory  Authority of India  போன்றவற்றின் அனுமதி பெறவேண்டும் . 

                        மேற்கூறிய அனுமதி பெற்றதனால் மட்டுமே , இவைகள் நல்ல பங்கு ஆகாது , இந்த அனுமதிகள் எல்லாம் , இந்த தடத்தில் செல்லவதற்கு உண்டான அனுமதி சீட்டு அல்லது நுழைவு சீட்டு என்றே கொள்ளலாம். நிறுவனத்தின் நிதிநிலைமை , வருங்கால வளர்ச்சி , தற்போதிய பொருளாதார சூழ்நிலை ஆகியவை நிறுவன பங்கின் வளர்ச்சியை நிர்ணயக்கும் காரணிகளாகும் . இந்த காரணிகளை பற்றி பின்னேர் விரிவாக பார்போம் . 

பங்கின் வகைகள்

பங்கின் வகைகள் :- 

பங்கில் நிறைய வகைகள் உள்ளன ஆனால் பொதுவாக பங்குசந்தையில் , சாதாரண பங்கு எனப்படும் equity share - ரையே வணிகம் செய்யபடுகிறது . பங்கின் வகைகளின் தன்மையை அழமாக ஆராயாமல் , அதன் வகைகளை மட்டும் தெரிந்து கொள்வோம் . 


1.Equity shares            - சாதாரண பங்கு - எந்தவித முன்னுரிமையும் அள்ளிகபாடதவை.
2.Preference Shares    - முன்னுரிமை பங்கு 

               a.Cumulative or Non-cumulative             
                   (குமுலேடிவ் மற்றும் குமுலேடிவ்  அல்லாத முன்னுரிமை பங்கு)
           
           b.Redeemable and Non- Redeemable 
                   ( ரெடிமபுல் மற்றும் ரெடிமபுல் அல்லாத முன்னுரிமை பங்கு)
                                                                                            
              c.Participating or non-participating 
                 (பர்டிசிபெடிங் மற்றும்  பர்டிசிபெடிங் அல்லாத முன்னுரிமை பங்கு)

Friday, August 27, 2010

பங்கு சந்தை

பங்கு சந்தை :-

                       பங்கு சந்தை என்பது நிறுவன பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கான களம் ஆகும் . அதாவது ஒரு நிறுவன பங்குகளை ஒரு முதளிட்டலரிடமிருந்து ,மற்றொருவருக்கு வாங்குவதற்கும் , விற்பதற்குமான இடமே பங்கு சந்தை ஆகும் . 

பங்கு சந்தை வகைகள் :- 

                       பங்கு சந்தையை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் . அவைகள் முறையே 

                          1.Primary Market        (ப்ரைமரி மார்க்கெட் )
                          2.Secondary Market (செகண்டரி மார்க்கெட் )

Primary Market        (ப்ரைமரி மார்க்கெட் ) :- 

                 ப்ரைமரி மார்க்கெட் என்பது , ஒரு நிறுவனம் அதன் வளர்ச்சி பணிகளுக்கான மூலதனத்தை , பொதுமக்களிடம் இருந்து பெறும்பொருட்டு , முறையே அரசு ,செபி மற்றும் அதன் தொழில் சார்ந்த அமைப்புகளிடமிருந்து முறையான அனுமதி பெற்று , மக்களை நாடி மூலதனத்தை திரட்டும் இடமே ப்ரைமரி மார்க்கெட் எனப்படும். 

சுருங்க சொல்வதாயின் நிறுவனம் நேரடியாக மக்களை நாடி மூலதனத்தை திரட்டும் இடமே ப்ரைமரி மார்க்கெட் எனப்படும்.  இவ்வாறு நிறுவனம் பொதுமக்களை நாடும் முறைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் . அவை முறையே 

1. IPO   - Initial public offering (இன்சியல் பப்ளிக் அப்-பரிங் )

2. FPO - follow on  public offering (பாலோ ஆன் பப்ளிக் அப்-பரிங் )

IPO 

   IPO என்பது "முதன் முறையாக " ஒரு நிறுவனம் பொதுமக்களை அதன் மூலதனத்திற்காக நாடுவதையே IPO என்கிறோம் . இதுவரை அந்நிறுவனம் தன்சுய மூதலீட்டில் இயங்கிகொண்டிருந்திருக்கும் , அதன் வளர்சிக்காகவும் , விரிவாக்க பணிக்காகவவும் நிதியை திரட்ட , நிறுவனம் பொது மக்களை நடுவதை IPO என்கிறோம் .

FPO 
FPO  என்பது , ஏற்கனவே ஒரு நிறுவனம் பொதுமக்களை நாடி மூலதனத்தை திரட்டி , அந்த நிதி கொண்டு தொழில் செய்துகொண்டிருக்கும் , மேலும் அதன் வளர்சிக்காக ,அந்நிறுவனம் மறுபடியும் மக்களை நாடி மூலதனத்தை திரட்டுவது  follow on  public offering  எனப்படும் . 

Thursday, August 26, 2010

பங்கு என்றால் என்ன ?

ஒரு financial planner -ரை வைத்து , உங்களின் வாழ்க்கை இலட்சியத்தை சென்றடைய முறையான வழிகள் , மேலும் பங்குச்சந்தை ஒதுக்கீடு , உங்களின் risk எடுக்கும் திறன் ஆகியவற்றை கணித்தாயிற்று ,இனி  பங்குச்சந்தை பற்றி ஒரு பார்வை பார்த்துவிடலாம் .

பங்கு என்றால் என்ன ?


சுருங்க கூறுவதாயின் " ஒரு நிறுவனத்தின் மூலதனத்தில் ,ஒரு பங்கையே , நாம் பங்கு என்கிறோம் . 

உதரணமாக :- 

                           ABC என்கிற நிறுவனம் , அதன் வளர்ச்சி பணிகளுக்கான மூலதனத்தை , பொதுமக்களிடம் இருந்து பெறும்பொருட்டு , அதன் மொத்த மூலதனத்தை சிறு சிறு கூறுகளாக பிரித்து வெளியிடும் . அவ்வாறு சிறு சிறு கூறுகளாக பிரித்த முதலீட்டில் , ஒரு கூறுரை , பங்கு என்னலாம் .

ABC நிறுவனத்திற்கு தேவைப்படும் முலதனதொகை :- ரூ. 1,00,000 என்க

இதனை 1000 கூறுகளாக பிரிப்பதால் கொண்டால் ,
ஒரு கூறின் அல்லது பங்கின் விலை ------------------------------:- 1,00,000/1000
                                                                                                  :- ரூ.100/-

Wednesday, August 25, 2010

2. ஒதுக்கீடு

                          இந்த பகுதியில் , எவ்வளவு தொகையை பங்கு சந்தையில் முதலிடு செய்யபோகிறிர்கள் (நீங்கள் தயாரித்த financial plan-படி அல்லது உங்களின் financial planner கொடுத்த அறிவுரையின் படி ) சந்தையில் உள்ள வணிகமுறைகளில் எதனை தேர்வு செய்ய போகிறிர்கள் , அதன் விகிதாசாரம் எவ்வளவு? என்பதை பற்றி பார்க்கலாம் .

உதரணமாக - மொத்த சேமிப்பில் 25% பங்கு முதலிடு என்று வைத்துக்கொண்டால் , அந்த 25சதவிகிதத்தில், எத்தனை சதவிகிதம் தினவணிகம் , நீண்ட மற்றும் குறுகிய கால முதலிடு என்பதை , முதலிடு மேற்கொள்வதற்கு முன் , நமக்கு தேவையான , சரியான விகிதத்தில் ஒதுக்கீடு செய்து வைத்திருக்க வேண்டும் . எப்பொழுதும் காலம நமக்கு சாதகமாகவே இருக்காது , சில சமயம் மாறும் , அப்படிப்பட்ட நேரங்களில் , கொண்டு வந்த 25 சதவிதத்தையும் இழந்து , அந்தோ பரிதாப நிலையில் , மட்டிக்கொள்ளகூடாது. அதற்குத்தான் இந்த மாதிரி முதலீட்டை பிரித்து முதலிட்டை மேற்கொள்வதன் மூலம் , Risk -கை நாம் கூடுமானவரை குறைத்துகொள்ளலாம் . 

உதரணமாக :- 

மொத்த சேமிப்பு -------------  = ரூ . 10,00,000/- என்க, 

பங்கு சந்தை - ஒதுக்கீடு --= 25% =>  10,00,000*25/100

                                            = ரூ .2,50,000 /-

மேலும் இந்த ஒதுக்கீட்டை கிழ்க்கண்டவாறு பிரிக்கலாம் .

 பங்குச்சந்தை முதலீடு 
               |
               |
               ->     நீண்டகால முதலீடு----- ->40%  (Rs,1,00,000)
               |
               ->     குறுகிய கால முதலீடு---->30%  (Rs.75,000)
               |  
               ->     தினவணிகம் ---------------> 30%  (Rs.75,000)

மேற்கூறியவை உதாரணம் மட்டுமே , காலம் , நேரம் , உங்களின் வயது வருமானம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவை பொறுத்து மாறுபடும்.