Sunday, February 13, 2011
Friday, February 11, 2011
Wednesday, February 9, 2011
நீளமான மற்றும் குறுகிய candle sticks
பொதுவாக candle sticks real body யின் அளவு , தினவணிகத்தில், வணிகர்கள் எவ்வளவு முனைப்புடன் இருக்கிறார்கள் என்பதை குறிக்கும் . real body யின் அளவு அதிகமாயின் , business volume நன்றாக இருக்கிறது எனவும் (வணிகர்கள் பங்குகளை வாங்கவோ , அல்லது விற்கவோ முனைப்புடன் இருக்கிறார்கள் ), real body யின் அளவு சிறியதாயின் business volume குறைவு எனவும்( சந்தையில் வணிகர்கள் , பங்குகளை வங்குவதர்க்கோ, விற்பதற்கோ ஆர்வம் காட்டவில்லை ) கொள்ளலாம் .
நீளமான வெள்ளை candle sticks , வணிகர்கள் பங்குகளை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் எனவும் , நீளமான கருப்பு candle sticks பங்குகளை விற்பதற்கு முனைப்புடன் இருப்பதையும் குறிக்கும் .
பொதுவாக , சந்தை இறங்கு முகத்தில் இருக்கும் பொழுது தோன்றும் வெள்ளை நிற candle sticks அமைப்பு , சந்தை ஏறு முகத்திற்கு தயாராக உள்ளதை குறிக்கும் , அவ்வாறு இந்த அமைப்பு தோன்றும் அந்த குறிப்பிட்ட நாளின் குறைந்த பட்ச விலையை , அடுத்த நாளின் support விலையாக கொண்டு பங்குகளை வாங்கலாம் ,
அதே போன்று , சந்தை ஏறு முகத்தில் இருக்கும் பொழுது தோன்றும் கருப்பு நிற candle sticks அமைப்பு , சந்தை இறங்கு முகத்திற்கு தயாராக உள்ளதை குறிக்கும் , அவ்வாறு இந்த அமைப்பு தோன்றும் அந்த குறிப்பிட்ட நாளின் உயர்ந்த பட்ச விலையை , அடுத்த நாளின் resistance விலையாக கொண்டு பங்குகளை விற்கலாம் ,
Subscribe to:
Posts (Atom)